Adrien Brody Net Worth: ஆஸ்காரை தட்டித்தூக்கிய அட்ரியன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அமெரிக்கா: இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா நியூயார்க்கில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் மறுதேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு இன்று அதாவது மார்ச் 3ஆம் தேதி வெகு சிறப்பாக நடந்தது. ஆஸ்கர் என்றால் உலகமே வியந்து பார்க்கும் விருது என்பதால், ஒவ்வொரு துறையிலும் யார் யார் விருது வெல்கிறார்கள் என்ற ஆவல் சினிமா ரசிகர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆண்டு தி ப்ரூடலிஸ்ட் படத்தில் நடித்த அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதை வென்று உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அவரது சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய சினிமாக்களிலும் ஒரு நடிகருக்கு சம்பளம் என்பது, படத்திற்கு படம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இல்லை என்றால் நிலையான சம்பளத்தை நடிகர்கள் வாங்க நினைப்பார்கள். ஆனால் ஹாலிவுட் படங்களில் அப்படி இல்லை எனலாம். அங்கு படத்தில் அந்த நடிகரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம், அவரின் கால்ஷீட் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி வாங்கிய சம்பளம் 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 13.5 கோடிகள். அதே நேரத்தில் இவர் கிங் காங் படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் என்றால், அது, 10 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 90 கோடிகளாம்.

சொத்து: இவர் கடந்த 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு அரண்மனையை விலைக்கு வாங்கியுள்ளார். மேலும், ரியல் எஸ்டேட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக அவர் இருப்பதால் அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும், பல இடங்களில் முதலீடு செய்துள்ளார். இப்படி இருக்கும்போது, நடிகரின் மொத்த சொத்தாக இப்போதைக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. பீட்டா மற்றும் யுனிசெப் ஆகியவற்றிற்கும் உதவித்தொகைகள் வழங்கி வருகிறார்.

லிப் டூ லிப்: இன்று நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் அட்ரியன் பிராடிக்கு நடிகை ஹாலி லிப் டு லிப் முத்தம் கொடுத்து அனைவரையும் அசர வைத்தார். மேலும் நடிகை ஹாலி, அட்ரியனுக்கு முத்தம் கொடுப்பதற்கு முன்னர் அவரது காதலியிடம் மன்னிப்பு கூறிவிட்டு, முத்தம் கொடுத்தார். அட்ரியனும் இந்த முத்தத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஹாலிக்கு அட்ரியன் ஆஸ்கார் மேடையில் முத்தம் கொடுத்தார். அதனை ஹாலி இப்போது திருப்பிக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











