ஆஸ்கர் விழாவில் அதிக விருதுகள் வென்ற படம் எது தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் எந்த படத்திற்கு அதிக விருது கிடைத்துள்ளது என்று தெரியுமா?
91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் பிளாக் பாந்தர் படம் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்கர் விருது வென்ற முதல் மார்வெல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிளாக் பாந்தர். இன்றைய விழாவில் பொஹிமியன் ராப்சொடிக்கு அதிகபட்சமாக நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த சவுண்ட் மிக்சிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங், நடிகர் ஆகிய பிரிவுகளில் பொஹிமியன் ராப்சொடிக்கு விருது கிடைத்துள்ளது. இதையடுத்து பிளாக் பாந்தர், ரோமா, கிரீன் புக் ஆகிய படங்களுக்கு தலா 3 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த துணை நடிகருக்கான விருது கிரீன் புக் படத்திற்காக மஹர்ஷலா அலிக்கு கிடைத்தது.
Comments


Click it and Unblock the Notifications