Oscars 2019: பிளாக் பாந்தரை முந்திய பொஹிமியன் ராப்சொடி
லாஸ் ஏஞ்சல்ஸ்: 91வது ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் நடந்தது.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் டால்பி தியேட்டரில் நடந்தது. தொகுப்பாளர் இல்லாததால் பிரபலங்களே தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களே தொகுப்பாளர் பொறுப்பை ஏற்று விருதுகளை அறிவித்தார்கள். சிறந்த துணை நடிகைக்கான விருது ரெஜினா கிங்கிற்கு(இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக்) கிடைத்தது.
சிறந்த டாக்குமென்ட்ரி பீச்சர் பிரிவுக்கான விருது ஃப்ரீ சோலோவுக்கும், மேக்கப் மற்றும் சிகை அலங்கார பிரிவில் வைசுக்கும்(vice) விருது கிடைத்தது. பிளாக் பாந்தர் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தது. இன்றைய விழாவில் அதிகபட்சமாக 4 விருதுகளை வென்ற படம் பொஹிமியின் ராப்சொடி ஆகும்.
தொகுப்பாளர் இல்லாத விழா சொதப்பலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை நன்றாகவே நடந்தது.


Click it and Unblock the Notifications











