ஆஸ்கர் விருதுகள்... சொல்லி அடிச்ச கில்லி.. சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்ற பிராட்பிட்!
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக நடிகர் பிராட் பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட், நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவென்டின் டரன்டினோ இயக்கத்தில், லியானார்டோ டிகாப்ரியோ, மார்கட் ராபி, பிராட் பிட் நடித்த ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது. தற்போது சிறந்த துணை நடிகருக்கான விருதை 56 வயது பிராட் பிட் தட்டிச் சென்றார்.
அவருக்கு போட்டியாக ஹாலிவுட்டின் நடிப்பு அசுரன்களான டாம் ஹான்க்ஸ், அந்தோனி ஹாப்கின்ஸ், அல் பசினோ மற்றும் ஜோ பெஸ்சி உள்ளிட்டோர் ஆஸ்கர் போட்டியில் நாமினிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த துணை நடிகர்
Tom Hanks -"A Beautiful Day in the Neighborhood"
Anthony Hopkins - "The Two Popes"
Al Pacino - "The Irishman"
Joe Pesci - "The Irishman"
Brad Pitt - "Once Upon a Time in Hollywood" - Winner


Click it and Unblock the Notifications