ஆஸ்கர் விருதை வென்ற ஜோரில் ஜோஜோ ராபிட் படக்குழு.. எந்த பிரிவில் தெரியுமா விருது கிடைத்தது?
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை ஜோ ஜோ ராபிட் திரைப்படம் தட்டிச் சென்றது.
92வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கண்கவர் உடைகளில் ஹாலிவுட் நடிகர்கள் நடிகைகள், விழாவை அலங்கரித்து வருகின்றனர்.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் நடித்த பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி படம் தட்டிச் சென்றது.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாங் ஜோன் ஹூ இயக்கிய பாராசைட் படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான ஜோஜோ ராபிட் திரைப்படத்திற்கு சிறந்த தழுவல் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகையான நடாலியா போர்ட்மேன் மற்றும் டைமூத்தி சாலாமெட் இந்த விருதினை வழங்கினர்.
டாய்க்கா வைட்டிட்டி இயக்கி நடித்துள்ள ஜோ ஜோ ராபிட் படம் இமேஜினேஷன் ஹிட்லரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜோ ஜோ எனும் சிறுவனின் மனதுக்குள் புதைந்துள்ள யூத வன்மத்தை அழகாக சித்தரித்துள்ளது. மேரேஜ் ஸ்டோரி படத்தை தொடர்ந்து ஸ்கார்லெட் ஜோஹன்சன் இந்த படத்திற்கும் சிறந்த நடிகைக்கான பிரிவில் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த தழுவல் திரைக்கதை
"The Irishman" - Steven Zaillian
"Jojo Rabbit" - Taika Waititi - Winner
"Joker" - Todd Phillips, Scott Silver
"Little Women" - Greta Gerwig
"The Two Popes" - Anthony McCarten


Click it and Unblock the Notifications