twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன இப்படி சொல்றீங்க.. இந்த வருஷமும் ஆஸ்கர் விருது விழாவில் அது இல்லையா? வருத்தத்தில் ரசிகர்கள்

    |

    Recommended Video

    Oththa seruppu OSCAR Nomination | Parthiban | Oscar Award

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிலும் தொகுப்பாளர்கள் இல்லை என்ற அப்டேட் கிடைத்துள்ளது.

    ஹாலிவுட் சினிமாவுக்கான அதிகபட்ச விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகிறது.

    சமீபத்தில் கோல்டன் குளோப் விருது விழா முடிந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவை உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    எப்போ?

    எப்போ?

    2019ம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களை கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழா அடுத்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது.

    தொகுப்பாளர்

    தொகுப்பாளர்

    இந்த ஆண்டும் ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர்கள் இன்றி கடந்த ஆண்டை போலவே நடைபெறும் என்ற அறிவிப்பை ஏபிசி என்டர்டெயின்மென்ட் தலைவர் காரே புர்கே தற்போது தெரிவித்துள்ளார்.

    பிரச்சனை

    பிரச்சனை

    ஆஸ்கர் விருது விழாவை ஹோஸ்ட் செய்த தொகுப்பாளர்களை ரசிகர்கள் தொடர்ந்து பங்கமாக கலாய்த்து வந்ததால், அந்த விழாவை தொகுப்பாளர்கள் இன்றி ஒளிபரப்ப ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஆண்டு முதல் முடிவு செய்து அதனை பின்பற்றி வருகிறது. அதே முடிவு இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிலும் தொடர்கிறது.

    நிற பாகுபாடு

    நிற பாகுபாடு

    வெள்ளை இனத்தவர்களுக்கே பெரும்பாலான ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்படுகின்றன என்றும் கருப்பினத்தவர்களை ஆஸ்கர் விருது விழா புறக்கணிக்கிறது என்ற இன பிரச்சனைகளும் தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

    ஆஸ்கர் ஸ்பெஷல்

    இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்கள், சர்ப்ரைஸ்கள், நட்சத்திரங்களின் பெர்ஃபார்மன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்த ஆண்டும் தொகுப்பாளர் இருக்க மாட்டார்கள் என ஆஸ்கர் விருது விழாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    2020 ஆஸ்கர் விருது விழாவில் ஜோக்கர், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், 1917, ஃப்ரோஸன் 2 உள்ளிட்ட பல படங்கள் விருதுகளை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பரிந்துரை பட்டியல்

    பரிந்துரை பட்டியல்

    ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி பரிந்துரை பட்டியலுக்காக உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஜனவரி 30ம் தேதி ஆஸ்கர் விருதுக்கான தேர்தல் தொடங்கி பிப்ரவரி 4ம் தேதியுடன் வாக்களிக்கும் கால அவகாசம் நிறைவு பெற்று பிப்ரவரி 9ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும்.

    English summary
    The Oscars will again go without a host next month, repeating a format credited with boosting ratings last year, US network ABC confirmed Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X