For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ் என்ன அழகு.. செக்ஸி டிரெஸ்.. 2020 ஆஸ்கர் விருதை மிஞ்சிய நடிகைகளின் கவர்ச்சி விருந்து!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

    92வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த உடை அணிந்து, ஹாலிவுட் நடிகைகள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகைகளான பிரை லார்சன், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ரெனி ஸெல்விகர், பெனலப் க்ரூஸ் உள்ளிட்ட நடிகைகள் கண்கவர் உடைகளை அணிந்து ரெட்கார்ப்பெட்டை அசத்தினர்.

    ஆஸ்கர் விருதுகள் 2020: ஒபாமாவும் அவரது வொய்ஃபியும் ரொம்ப ஹேப்பி.. ஏன்னு பாருங்க!

    ஸ்கார்லெட் ஜோஹன்சன்

    சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை என இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும், அவர் அணிந்து வந்த உடை ஆஸ்கர் விருதையே மறக்கடிக்கச் செய்துள்ளது. ரெட்கார்ப்பெட்டில் செம்ம செக்ஸியாக உடை அணிந்து வந்த ஸ்கார்லெட் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகிறது.

    பிரை லார்சன்

    பிளாக் விடோ நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சியில் கலக்கினால், கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் மட்டும் என்ன சும்மா விடுவாரா என்ன? அவரும் தனது பங்கிற்கு, பிங்க் நிற க்ளிட்டர் உடையில், தாராளமாக தனது முன்னழகை காட்டி உலகளவில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார்.

    ரெனி ஸெல்வீகர்

    92வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி படத்திற்காக நடிஅகி ரெனி ஸெல்வீகர் தட்டிச் சென்றார். வெள்ளை நிற மின்னும் உடையில், ஒன் ஸைட் ஓபன் விட்டு செம்ம செக்ஸியான உடை அணிந்து ரெனி ஸெல்வீகர் விருது விழாவுக்கு வருகை தந்து பலரது பார்வைகளை தன் பக்கம் திருப்பி இருந்தார்.

    நடாலியா போர்ட்மேன்

    தோர், ஸ்டார் வார்ஸ், பிளாக் ஸ்வான் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய பிரபல ஹாலிவுட் நடிகை நடாலியா போர்ட்மேன், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் கருப்பு நிற ஓவர் கோட்டை அணிந்து, உள்ளே தங்க நிறத்தில் கூடிய அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த ஆடை அணிந்து ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்து இருந்தார்.

    மார்கட் ராபி

    ஒன்ஸ் அப்பான் டைம் இன் ஹாலிவுட் மற்றும் பாம்ஷெல் படங்களில் நடித்திருந்த நடிகை மார்கட் ராபி, இரு முறை ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பிடித்தும், இன்னும் ஆஸ்கர் விருதை வெல்ல முடியவில்லை. கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம கவர்ச்சியாக ஆஸ்கர் விருதுக்கு வந்திருந்த மார்கட் ராபி, தனது சிரிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

    English summary
    Hollywood heroines Scarlett Johansson, Brie Larson, Margot Robbie and much more dons the best dressed at Oscars 2020.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X