ஆஸ்கர் 2020: இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு.. எப்படி பார்க்கலாம்.. விபரம் இதோ!

சென்னை: ஆஸ்கர் விருது விழா வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் எந்தெந்த ஸ்ட்ரீமில் நேரலை செய்யப்படுகிறது எத்தனை மணிக்கு காணமுடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலக சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விருது விழாக்களில் முக்கியமானது ஆஸ்கர் விருது விழா. நம் நாட்டைச் சேர்ந்த ஒரு படமாவது ஆஸ்கர் விருதை வாங்கிவிடாதா என ஏங்காதவர்களே இல்லை.

Oscars 2020: Where and when can see Nominees In India?

நம் படம் நிச்சயம் ஆஸ்கர் நாமினேஷன் வரை செல்லாதா என்ற ஏக்கம் பெரும்பாலான இயக்குநர்களின் மனதில் இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 9ஆம் தேதி இரவு ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. ஹாலிவுட்டின் சிறந்த இரவாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி வரும் 10ஆம் தேதி காலை ஆகும். அதாவது திங்கள் கிழமை காலை ஆகும். இந்தியாவில் ஸ்டார் மூவிஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் காலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Golden globes 2020 | Priyanka Chopra Nick Jones | Lip Lock in Red Carpet

ஆஸ்கர் விருதுக்காக சிறந்த படங்களின் பட்டியலில் 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, பாராசைட், ஜோஜோ ராபிட், ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி, மேரேஜ் ஸ்டோரி, தி ஐரிஷ் மேன், லிட்டில் வுமன், ஜோக்கர், ஒன்ஸ் அப்பான் டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X