twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக.. ஆஸ்கர் விருது விழா 2 மாதங்கள் தள்ளிவைப்பு.. இது 4வது முறையாம்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா காரணமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    NATIONAL AWARD WINNING BAARAM MOVIE DIRECTOR INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.

    உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விழா இது.

    குரல்களை கேட்க தொடங்கிய சுஷாந்த்.. மிரண்டு ஓடிய காதலி.. உச்சக்கட்ட மனஅழுத்தம்.. பகீர் தகவல்! குரல்களை கேட்க தொடங்கிய சுஷாந்த்.. மிரண்டு ஓடிய காதலி.. உச்சக்கட்ட மனஅழுத்தம்.. பகீர் தகவல்!

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி இருக்கிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    லாக்டவுன் காரணமாக

    லாக்டவுன் காரணமாக

    இந்தத் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் இது அதிகரித்து வருவது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சினிமா
    படப்பிடிப்புகள், ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில தயாரிப்பாளர்கள் ஒ.டி.டியில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    விழா தள்ளிவைப்பு

    விழா தள்ளிவைப்பு

    இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா, இரண்டு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ஆஸ்கர் விருது குழு அறிவித்துள்ளது. இதற்காக படங்களை ஆஸ்கர் விருது குழுவுக்கு சமர்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நான்காவது முறை

    நான்காவது முறை

    ஆஸ்கர் விருது விழா, இதற்கு முன்பு மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1938- ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் 1968-ம் ஆண்டில் மாட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது, 1981-ம் ஆண்டு அதிபர் ரொலாண்ட் ரீகனை கொல்ல நடந்த முயற்சி ஆகியவற்றின் போது ஆஸ்கர் விழா ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா காரணமாக இப்போது நான்காவது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    The 2021 Oscars ceremony was moved to April from February on Monday due to the havoc caused in the in the movie industry by the coronavirus pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X