Oscars 2022: 94வது ஆஸ்கர் விருது விழா.. கண்கவர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அசத்தல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் சற்று முன் தொடங்கியது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி உள்ளிட்ட சினிமாவின் முக்கியமான 24 பிரிவுகளுக்கான விருதுகள் இந்த விழாவில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய ஆஸ்கர் விருது விழா மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஸ்கர் விருது விழா ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ரெட் கார்பெட் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த ஆஸ்கர் விருது விழாவை எமி ஸ்கூமர் மற்றும் வாண்டா ஸ்கைஸ் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸின் அசத்தலான 'Be Alive' பாடலை பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்திய ரசிகர்கள் ஆஸ்கர் நிகழ்ச்சியை நேரலையாக கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











