twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Oscars Winners List: 6 விருதை அள்ளிய டூன்..வில் ஸ்மித்துக்கு கிடைத்த ஆஸ்கர் விருது..முழு லிஸ்ட் இதோ!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது.

    சிறந்த படத்திற்கான விருதை கோடா படம் வென்றது. சிறந்த நடிகருக்கான விருது வில் ஸ்மித்துக்கு கிடைத்தது.

    ஆஸ்கர் 2022ல் அதிகபட்சமாக 6 விருதுகளை டூன் திரைப்படம் வென்று அசத்தியது. சிறந்த இயக்குநருக்கான விருதை பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் வென்றார்.

    முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்.. அந்த அடி கொடுத்தும் கொடுக்கலைன்னா எப்படி?முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்ற வில் ஸ்மித்.. அந்த அடி கொடுத்தும் கொடுக்கலைன்னா எப்படி?

    6 விருதுகளை அள்ளிய டூன்

    6 விருதுகளை அள்ளிய டூன்

    ஆஸ்கர் விருது விழா 2022ல் அதிகபட்சமாக 6 விருதுகளை டூன் திரைப்படம் வென்று அசத்தியது. மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்யப்பட்டு இருந்த இந்த திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட், சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த தயாரிப்பு என மொத்தம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கியது. டூன் படத்தின் இயக்குநர் டெனிஸ் வில்லென்யூ மற்றும் அவரது படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் ஆஸ்கர் விழாவை கொண்டாடினர். நாயகன் டிமோதி ஹாலமெட் சட்டை அணியாமல் வெறும் கோட் மட்டுமே அணிந்து கொண்டு ஆஸ்கர் விழாவுக்கு வந்திருந்தார்.

    மீண்டும் பெண் இயக்குநர்

    மீண்டும் பெண் இயக்குநர்

    கடந்த ஆண்டு நோமேட் லேண்ட் திரைப்படத்திற்காக பெண் இயக்குநர் க்ளோ சாஹோ சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் ஆஸ்கர் விருது வென்றார். ஆஸ்கர் விருது வென்ற ஜேன் கேம்பியனுக்கு சர்வதேச ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

    சிறந்த நடிகர்கள்

    சிறந்த நடிகர்கள்

    சிறந்த நடிகருக்கான விருதை கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வென்றார். சிறந்த நடிகைக்கான விருது The Eyes of Tammy Faye படத்தில் வயதான தோற்றத்தில் நடித்த ஜெஸிகா சஸ்டியன் வென்றார். நடிகர் வில் ஸ்மித் விருதை வென்ற நிலையில், மேடையிலேயே கண் கலங்கி அழுது விட்டார்.

    கோடா படத்திற்கு 3 விருதுகள்

    கோடா படத்திற்கு 3 விருதுகள்

    மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்ட கோடா படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் விருதை டிராய் கோட்சுர் இந்த படத்தில் நடித்ததற்காக வென்றது குறிப்பிடத்தக்கது. சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 3 விருதுகளை இந்த படம் வென்றது.

    மொத்த லிஸ்ட்

    மொத்த லிஸ்ட்

    சிறந்த படம் - கோடா (Coda)

    சிறந்த நடிகர் - வில் ஸ்மித் (King Richard)

    சிறந்த நடிகை - ஜெஸிகா சஸ்டெய்ன் (The Eyes of Tammy Faye)

    சிறந்த பாடல் - பில்லி எலிஷ், ஃபிலியாஸ் (No Time To Die)

    சிறந்த அனிமேஷன் திரைப்படம் - என்கான்டோ (Encanto)

    லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி லாங் குட்பை (The Long Goodbye)

    சிறந்த சர்வதேச திரைப்படம் - டிரைவ் மை கார் (Drive My Car)

    சிறந்த திரைக்கதை - கென்னத் பிரானாக் (Belfast)

    சிறந்த துணை நடிகர் - டிராய் கோட்சர் (Coda)

    சிறந்த இயக்குநர் - ஜேன் கேம்பியன் (The Power of the Dog)

    சிறந்த துணை நடிகை - அரியானா டி போஸ் (West Side Story)

    சிறந்த ஆவணப் படம் - சம்மர் ஆஃப் சோல்

    சிறந்த தழுவல் திரைக்கதை - சியான் ஹெடர் (Coda)

    சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் - The Eyes of Tammy Faye

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டூன்

    சிறந்த இசை - ஹன்ஸ் ஸிம்மர் (Dune)

    சிறந்த அனிமேஷன் குறும்படம் - தி விண்ட் ஷீல்ட் வைப்பர்

    சிறந்த சிறிய ஆவணப்படம் - தி குயின் ஆஃப் பேஸ்க்கெட் பால்

    சிறந்த ஒளிப்பதிவு - கிரெய்க் ஃப்ரேஸர் (Dune)

    சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜென்னி பீவன் (Cruella)

    சிறந்த எடிட்டிங் - ஜோ வாக்கர் (Dune)

    சிறந்த தயாரிப்பு - டூன்

    சிறந்த இசை - டூன்

    English summary
    Space Political movie Dune bags 6 Awards, Will Smith wins his debut Oscar and his fight at the stage trending world wide. Oscars 2022 complete winner list is here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X