13 வயது மகள் பலாத்காரம்.. நீதிக்காக போராடிய தந்தையின் ஆவண படம்.. இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி!

மும்பை: ஆர்ஆர்ஆர் திரைப்படம் தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் உள்ளிட்ட இந்திய படங்கள் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளையே அள்ளி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. ஆனால், இந்த ஆண்டு நாமினேஷன் பட்டியலில் கூட இந்திய படங்கள் இடம்பெறவில்லையே என நினைத்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய 'To Kill a Tiger' எனும் ஆவண படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது.

ஆஸ்கர் 2024 விருது விழா வரும் மார்ச் மாதம் 11ம் தேதி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் 23 பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர்கள், காஸ்ட்யூம், மேக்கப், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு மேற்பார்வை என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான நாமினேஷன் பட்டியல் நேற்று வெளியானது.

Oscars 24: India based documentary To Kill a Tiger nominated

லீடிங்கில் ஓபன்ஹெய்மர்: சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம் என பல பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படம் அதிக நாமினேஷன்களை பிடித்துள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து மார்கட் ராபி, ரியான் கோஸ்லிங் நடித்த பார்பி திரைப்படம் பல பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ளது. மேலும், பல படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளன.

இந்தியர் இயக்கிய ஆவண படம்: இந்நிலையில், இந்தியா வம்சவாளி இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய To Kill a Tiger' எனும் ஆவண படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இந்தியாவை சார்ந்த ஆவணப்படமான To Kill a Tiger 96வது ஆஸ்கர் விருது விழாவுக்கு தேர்வாகி உள்ள நிலையில், வெற்றி பெறும் என அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

13 வயது சிறுமி பலாத்காரம்: ரஞ்சித் என்பவர் தனது 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர எப்படியெல்லாம் போராடினார் என்றும் பணம் படைத்தவர்கள் அந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்கிற கதையாக அந்த ஆவணப்படம் உருவாகி உறைய வைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X