குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத்... குவியும் வாழ்த்து!
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் பாடகர் அத்னன் சமி ஆகியோர் குடியரசுத் தலைவர் கையால் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.
2020ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்ட்ரபதி பவனில் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை புரிந்தவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி வருகிறது.

பத்ம விருதுகள் 2020
அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மரணமடைந்த 16 பேர்
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். மேலும் மரணமடைந்த 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதில் திரைப்படத் துறையில் இருந்து விருது பெற்றவர்களின் பட்டியலில் திரைப்பட தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோரும் உள்ளனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணத்திற்குப் பிறகு பத்ம விபூஷன் விருதை பெறுகிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தும் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். ஜொலிக்கும் தங்க நிற சேலையில் கங்கனா ரனாவத் குடியரசு தலைவரிடமிருந்து விருது பெறும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது
நடிகை கங்கனா ரனாவத் கடைசியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடித்திருந்தார். மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சமீபத்தில் பெற்றார் கங்கனா. இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத்.

பாடகர் அத்னன் சமி
இந்நிலையில் தற்போது பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள நடிகை கங்கனா ரனாவத்துக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதேபோல் பாடகர் அத்னன் சமியும் குடியரசுத் தலைவர் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த அத்னன் சமி, 2016 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றார்.


Click it and Unblock the Notifications











