twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருதுகளை குவித்த பத்மாவத்.. அத்தனை போராட்டம் பண்ணீங்களே.. பாத்தீங்களா!

    |

    டெல்லி பத்மாவத் திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.

    நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் 190 கோடி ரூபாய் செலவில் உருவான படம் பத்மாவதி. இந்தப் படத்தை
    இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டது. இதில் ராணி பத்மாவதி கேரக்டரில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

    National Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..! National Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..!

    படம் குறித்து தவறான தகவல்

    படம் குறித்து தவறான தகவல்

    ஆனால் அந்த படம் குறித்து தவறான தகவல் பரவியது. அதாவது ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவதாக கூறப்பட்டது.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதற்கு ராஜபுத்திர இனத்தவர்களும் இந்து அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தின் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலிக்கும் படத்தின் நடிகையான தீபிகாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    தலையும் மூக்கும்

    தலையும் மூக்கும்

    தீபிகாவின் தலையையும் மூக்கையும் கொண்டு வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல வடமாநிலங்களில் படத்திற்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது.

    நல்ல வரவேற்பு

    நல்ல வரவேற்பு

    ஆனால் படம் ரிலீஸானதும் எல்லாம் தலைகீழாக மாறியது. படத்தின் கதையை வேறாக இருந்து ராஜ புத்திர இன பெண்களை பெருமை படுத்தும் வகையிலேயே படம் இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மூன்று தேசிய விருதுகள்

    மூன்று தேசிய விருதுகள்

    இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் பத்மாவத் படம் மூன்று தேசிய விருதுகளை குவித்துள்ளது.

    சிறந்த இசையமைப்பாளர்

    சிறந்த இசையமைப்பாளர்

    அதாவது சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பத்மாவத் படத்திற்கு இசையமைத்த அப்படத்தின் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த பாடகர்

    சிறந்த பாடகர்

    சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதும் பத்மாவத் படத்திற்கே அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் படத்தில் இடம்பெற்ற பின்தே தில் பாடலை பாடிய பாடகர் அர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த நடனம்

    சிறந்த நடனம்

    சிறந்த நடனத்திற்கான தேசிய விருதும் பத்மாவத் படத்திற்குதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் கூமர் பாடலில் இடம்பெற்ற நடனத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    Padmaavat movie wins three National awards

    English summary
    Padmaavat movie wins three National awards for music, Choreography and play back singer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X