பாண்டு மகன் படத்துக்கு மூன்று விருதுகள்!

பிண்டு ஏற்கெனவே பட்டாளம், வெள்ளச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சிக்காக குறும்படங்கள் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அடுத்து புதிய படம் இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.
நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆப்பு என்ற 7 நிமிட குறும்படத்தை சோம்சாய்நாதன் சி கே இயக்கியுள்ளார்.
மூன்று தாதாக்களைச் சுற்றி ஓடும் இந்தக் கதையில் பிண்டு, மூடம் கூடம் புகழ் சென்ராயன் மற்றும் ஆக்ஷன் பிரகாஷ் நடித்துள்ளனர்.
தன் மகளைக் கடத்தியவர்களை ஹீரோ எப்படி பழிதீர்க்கிறார் என்பதுதான் கதை. ஆனால் அதில் ஒரு சுவாரஸ்ய முடிச்சு வைத்து உருவாக்கியிருந்தார்கள்.
இந்தப் படத்தை நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியின் நடுவர்களான இயக்குநர்கள் சுந்தர் சி மற்றும் வசந்த் பெரிதும் பாராட்டினர்.
அதுமட்டுமல்ல, இந்தப் படத்துக்கு சிறந்த படம், சிறந்த படக்குழு, சிறந்த நடிப்புக்கான மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.
இதற்கு முன்பு இதே குழு உருவாக்கிய இரு குறும்படங்களும் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











