ஆஸ்கர் கோலாகலம்: பாரசைட் படத்துக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாரசைட் என்ற படத்துக்குச் சென்றுள்ளது.
92 வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

ஹாலிவுட்டில் உருவான சினிமாக்களையும் திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். விழா நடைபெறும் டால்பி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.
இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது டாய் ஸ்டோரி 4 என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன், டோனி ஹேல் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது, பாரசைட் (Parasite) படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய போங்க் ஜூன் -ஹோ மற்றும் ஹான் ஜி-வோன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏற்கனவே சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











