'ஜோக்கரு'க்கு கிடைக்கலை... பாரசைட்-டுக்கு சிறந்த படத்துக்கான விருது... 4 விருதுகளை அள்ளியது
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது, தென்கொரியாவின் பாரசைட் படத்துக்கு கிடைத்துள்ளது.
92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிகிறது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.
இதில் சிறந்த படத்துக்கான விருது, பாரசைட் படத்துக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது தென்கொரியாவின் பாராசைட் படம். இந்நிலையில் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்று 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











