Oscars 2025: ஆஸ்கர் விருது விழாவில் வரலாறு படைத்த கறுப்பின ஆடை வடிவமைப்பாளர்.. வேறலெவல் சம்பவம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை Wicked படத்தில் ஆடை வடிவமைப்பாளர் பால் தேஸ்வெல் (Paul Tazewell) வென்றார். இந்த ஆஸ்கர் விருதை வெல்லும் முதல் கருப்பின மனிதன் நான் தான் என உணர்ச்சிப்பூர்வமாக மேடையில் பேசினார். இவரின் பேச்சு கேட்டு ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறப்பான மேக்கப், சிறந்த விஷூவல் எபக்ட் என 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டது. A Complete Unknown, Conclave, Gladiator II, Nosferatu உள்ளிட்ட படங்கள் ஆடை வடிவமைப்பாளர் பிரிவில் நாமினேஷனில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Oscars 2025 Oscar Awards 2025 Paul Tazewell 2025

சிறந்த அனிமேஷன் குறும்படம்: சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருதை இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் படத்திற்காக ஷிரின் சோஹானி மற்றும் ஹொசைன் மொலயேமி பெற்றுக்கொண்டனர். அதே போல, சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிளேவ் வென்றார். பீட்டர் ஸ்ட்ராஹான் படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த 97 அகாடமி விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X