twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2012 விகடன் விருதுகளை அள்ளிய வழக்கு எண் 18/9, பீட்ஸா, கும்கி

    By Mayura Akilan
    |

    2012ம் ஆண்டிற்கான விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வழக்கு எண்18/9, பீட்ஸா திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளன.

    சிறந்த நடிகராக விஜய், சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இசை அமைப்பாளராக கும்கி படத்திற்கு இசை அமைத்த இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளராக நீயா நானா கோபிநாத், தொகுப்பாளினியாக திவ்யதர்ஷினி தேர்வாகியுள்ளனர். திரைத்துறை, தொலைக்காட்சித்துறை தவிர எழுத்தாளர்கள், எப்.எம் ரேடியோ, வாகனம் கூட விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு எண் 18/9 க்கு 6 விருதுகள்

    வழக்கு எண் 18/9 க்கு 6 விருதுகள்

    லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த தயாரிப்பு, சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த வில்லன், ஆகிய 6 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

    பீட்ஸா படத்திற்கு 3 விருது

    பீட்ஸா படத்திற்கு 3 விருது

    புதிய முயற்சியாக அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்ஸா திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என 3 விருதுகள் கிடைத்துள்ளன.

    கும்கி படத்திற்கு 3 விருது

    கும்கி படத்திற்கு 3 விருது

    திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக இமான், சிறந்த பாடலாசிரியராக யுகபாரதி, சிறந்த பின்னணி பாடகியாக மகிழினி மணிமாறன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த நடிகர் விஜய், நடிகை சமந்தா

    சிறந்த நடிகர் விஜய், நடிகை சமந்தா

    2012ம் ஆண்டின் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நண்பன், துப்பாக்கி, படத்தில் நடித்த விஜய்க்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    சிறந்த நகைச்சுவை நடிகராக சந்தானம், நகைச்சுவை நடிகையாக மதுமிதாவும் தேர்வாகியுள்ளனர். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் இவர்கள் நடித்துள்ளனர்.

    சிறந்த புதுமுகங்கள்

    சிறந்த புதுமுகங்கள்

    சிறந்த புதுமுக நடிகராக அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த புதுமுக நடிகையாக சுந்தரபாண்டியன், கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் சிறந்த புதுமுக இயக்குநராக தேர்வாகியுள்ளார்.

    சின்னத்திரை கலைஞர்கள்

    சின்னத்திரை கலைஞர்கள்

    சின்னத்திரையில் சிறந்த தொலைக்காட்சி சேனலாக விஜய் டிவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தொகுப்பாளராக நீயா? நானா? கோபிநாத் தேர்வாகியுள்ளார். சிறந்த தொகுப்பாளினியாக ஹோம் ஸ்வீட் ஹோம் தொகுத்து வழங்கும் திவ்ய தர்ஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த தொடராக ‘அழகி’

    சிறந்த தொடராக ‘அழகி’

    சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தொடராக ‘அழகி' தேர்வாகியுள்ளது.

    சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு

    சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு

    2012ம் ஆண்டிற்கான சிறந்த நாவலாக பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த சிறுகதைத் தொகுப்பாக அ.முத்துலிங்கம் எழுதிய குதிரைக்காரன், சிறந்த கவிதைத் தொகுப்பாக நக்கீரன் எழுதிய ‘என் பெயர் ஜிப்சி' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கட்டுரைத் தொகுப்பாக பாமயன் எழுதிய வேளாண் இறையாண்மை தேர்வாகியுள்ளது.

    விளையாட்டுத்துறையில் விருது

    விளையாட்டுத்துறையில் விருது

    2012ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக தடகள வீரர் பிரேம்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்குவாஷ் வீரங்கனை அனகா அலங்காமணி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பயிற்சியாளராக தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    Pizza, Kumki and 18/9 have snatched the 2012 vikatan film awards. Samantha was adjudged as the best actress and Vijay was selected as the best actor for his stellar performance in Nanban and Thuppakki.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X