twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த இயக்குநருக்கான சைமா விருதை வென்றார் தமிழகத்தை சேர்ந்த பொன்குமரன்.. குவியும் பாராட்டுக்கள்..

    |

    சென்னை: 2019-ஆம் ஆண்டில் வெளியான யஜமானா என்ற கன்னட திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளின் (siima) சிறந்த இயக்குநர் (கன்னடம்) விருதை பொன்குமரன் வென்றுள்ளார்.

    ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலங்களின படங்கள்... எந்தெந்த படங்கள்னு பாருங்க! ஓடிடியில் ரிலீஸாகும் பிக்பாஸ் பிரபலங்களின படங்கள்... எந்தெந்த படங்கள்னு பாருங்க!

    கன்னட திரைப்படம்

    கன்னட திரைப்படம்


    தமிழ்நாட்டை சேர்ந்த பொன்குமரன் தனது வெற்றியில் தனது குருநாதர்களான இயக்குநர்கள் கே பாக்யராஜ் மற்றும் கே எஸ் ரவிக்குமாருக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்தார்.

    பாரம்பரிய எண்ணெயைப் பயன்படுத்தும் கிராமம் ஒன்று பெரிய மாஃபியா மோசடியை எவ்வாறு சமாளிக்கிறது என்பதுதான் யஜமானா படத்தின் கதை. தர்ஷன், ரஷ்மிகா மந்தனா மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கர்நாடகா முழுவதும் 100-நாட்களுக்கு மேல் ஓடியது.

    லிங்கா படத்தின் கதை

    லிங்கா படத்தின் கதை

    2011 ஆண்டு வெளியான 'விஷ்ணுவர்தனா' மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன்குமரன். இந்த படத்திற்கு அவருக்கு siima சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்தது.பொன்குமரன், தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சாருலதா படத்தையும் இயக்கியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் இயக்கி ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் கதையை பொன்குமரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

    முன்னணி நடிகர்களை வைத்து பொன்குமரன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மிருகா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோஸ் பேனரில் பி வினோத் ஜெயின் தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சரியான நேரத்தில் விருது:

    சரியான நேரத்தில் விருது:

    நல்ல கலைஞர்களுக்கு விருதுகள் கிடைப்பது தான் அங்கீகாரம் மற்றும் வளர்ச்சி .சிறந்த படைப்பாளிகளுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்கள் பக்குவமான மன நிலையை மேம்படுத்தும் . பொன்குமரன் போன்ற திறமைசாலிகள் தமிழ் சினிமாவிற்கும் கன்னட சினிமாவிற்கும் கிடைத்த பெருமை .

    குவியும் பாராட்டு

    குவியும் பாராட்டு

    நிறைய விருதுகளை பொன்குமரன் வாங்க வேண்டும் என்றும் பல புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர் . கதை எழுதுவது, திரைக்கதை அமைப்பது இவ்விரெண்டுக்கும் உண்டான வித்யாசத்தை நன்கு புரிந்த பொன்குமரன் நிறைய சாதிக்க பல திட்டங்கள் தீட்டி வருகிறார் . விரைவில் புதிய பல படைப்புகள் வெளியே வரும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர் .

    English summary
    Film writer and director Pon Kumaran won the Siima Award under Best Director category For the Kannada ‘Yajamana ‘ released in 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X