SIIMA 2023: விருது விழாவிலும் விக்ரமை வீழ்த்திய பொன்னியின் செல்வன்.. எத்தனை விருதுகள் தெரியுமா?
சென்னை: சைமா 2023 விருது விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், தமிழ் படங்களுக்கான விருது விழாவில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் வசூலில் வீழ்த்தியதை போலவே அதிக விருதுகள் பட்டியலிலும் வீழ்த்தி முன்னிலை வகிக்கிறது.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என இரு படங்களுமே பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன.

விக்ரம் வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. சைமா விருது விழாவிலும் அந்த படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.
பொன்னியின் செல்வன் வசூல்: கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி வசூலிலும் விக்ரம் படத்தை முறியடித்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் படமாக மாறிய நிலையில், சைமா விருது விழாவிலும் பொன்னியின் செல்வன் விக்ரம் படத்தை விட ஒரு விருது கூடுதலாக பெற்று லீடிங்கில் உள்ளது.
விக்ரம் பெற்ற விருதுகள்: சைமா 2023 நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பாடகர் என இரு விருதுகளை உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்காக பெற்றார். மேலும், சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கும் சிறந்த துணை நடிகை விருது டினாவுக்கும் கிடைத்தன. சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு செல்லாமல் அனிருத்துக்குத் தான் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக விக்ரம் திரைப்படம் 5 விருதுகளுடன் மாஸ் காட்டியது.

பொன்னியின் செல்வனுக்கு 6 விருதுகள்: சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை த்ரிஷாவும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ரவி வர்மாவும், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் விருதினை தோட்டாதரணியும் சிறந்த பாடலாசிரியர் விருது இளங்கோ கிருஷ்ணனுக்கும் சிறந்த சாதனையாளர் விருது மணிரத்னத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் படத்துக்கு 6 விருதுகள் சைமா 2023 விருது விழா நிகழ்ச்சியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











