Don't Miss!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேரள அரசு விருதுகள்: சிறந்த நடிகர் பிருத்விராஜ் - நடிகை ரீமா கல்லிங்கல்!
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அங்கு 84 படங்கள் வெளியாகின. மூத்த சினிமா இயக்குநர் ஐவி சசி, மூத்த நடிகை சுரேகா, இயக்குநர் சிபி மலயில் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது. இதனை கேரள சினிமா அமைச்சர் கணேஷ்குமார் முறைப்படி அறிவித்தார்.
கமல் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்ட் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு வாஸ்தவம் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்றவர் பிருத்விராஜ்.
சிறந்த நடிகை விருதை ரீமா கல்லிங்கல் பெற்றுள்ளார். '22 பிமெல் கோட்டயம்' என்ற படத்தில் நடித்தற்காக இவ்விருது கிடைத்துள்ளது.
ஆயாளும் ஞானும் படத்துக்காக லால் ஜோஸ் சிறந்த இயக்குநர் விருதினைப் பெறுகிறார்.
சிறந்த படமாக 'செல்லு ய்டு' படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சலீம் குமாருக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடகராக விஜய் ஜேசுதாஸ், சிறந்த பாடகிய சித்தாரா தேர்வாகியுள்ளனர். எம்.ஜெயச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார்.
மனோஜ் கே ஜெயன், சஜிதா மாடத்தில் ஆகியோர் சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்