"முதல் இந்திய நடிகை..." - பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்!
Recommended Video

மும்பை : பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் தொகுப்பாளராக செயல்பட்டார். இந்திய நடிகைகளில் இந்த கௌரவம் முதன் முதலாக பிரியங்கா சோப்ராவுக்கு தான் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி நடக்கிறது. இந்த விருதுக்கு ஏராளமான படங்கள் விண்ணப்பித்துள்ளன. அவற்றிலிருந்து விருது போட்டிக்கு தகுதியான படங்களை ஆஸ்கர் விருது தேர்வு கமிட்டி தேர்வு செய்துள்ளது. பின்னர் இந்தப் படங்களில் இருந்து சிறந்த படங்கள், கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தப் பரிந்துரை படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவுடன் ஹாலிவுட் நடிகைகள் ரொசாரியோ டான்சன், ரிபெல் வில்சன், மச்செல் யோ, மிச்சல் ரோட்ரிக்ஸ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாகவும் இருக்கிறார். ஹாலிவுட் நடிகையாக வளர்ந்ததன் மூலம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











