கொரிய திரைப்பட விழாவில் விருது வென்ற ரேடியோபெட்டி!

By Shankar

கொரியாவின் பூசன் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான ரசிகர்கள் விருதையும் 20 ஆயிரம் டாலர் பரிசையும் வென்றுள்ளது ரேடியோபெட்டி திரைப்படம்.

புதுமுக இயக்குனர் ஹரி விஸ்வநாதன் இயக்கியுள்ள படம் ‘ரேடியோபெட்டி'. இந்த படத்தில் ரேடியோ பெட்டியும், லட்சுமணன் தாத்தாவும்தான் பிரதான கதாபாத்திரங்கள். இவர்களுடன் டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா, நிவாஸ், ஆதித்தன், லிஸ்சி, பேபி மாயா, இந்துமதி, மாஸ்டர் ரோகன், மிட்டாய் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

'Radiopetti' won the audience award in Busan Film Festival

தன் வீட்டில் தாத்தாவுக்கும் ரேடியோ பெட்டிக்கும் இடையில் இருந்த நட்பை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

'Radiopetti' won the audience award in Busan Film Festival

தென்கொரிய படவிழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ்படம் என்ற பெருமையை ‘ரேடியோ பெட்டி' பெற்றுள்ளது. இந்த படத்தில் 75 வயதான லட்சுமணன் என்ற நாடக நடிகர், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சரவணா நடராஜன் என்பவர் ஒளிப்பதிவை அமைக்க, லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் போர்ட் என்பவர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனரான ஹரி விஸ்வநாத் யாரிடமும் உதவி இயக்குனராகவோ, துணை-இணை இயக்குனராகவே பயிற்சி எடுக்காமல் படத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: award விருது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X