Don't Miss!
- News
"அற்பத்தனமானது.." துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதா? திக்விஜய் சிங்கை சாடிய ராகுல் காந்தி
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஆஸ்கர் விருதுகள் 2023 : சிறந்த திரைப்பட பிரிவில் தேர்வாகாத ஆர்ஆர்ஆர்!
சென்னை : கடந்த 2001ம் ஆண்டில் அமீர்கானின் லகான் படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வானது.
இதனிடையே சுமார் 22 ஆண்டுகள் கழித்து தற்போது ராஜமௌலி இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதுக்காக இரு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.
இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வாகியுள்ளது.
ஆஸ்கர்
ரேஸில்
ஆர்ஆர்ஆர்..பரிந்துரை
பட்டியலில்
2
பிரிவில்
தேர்வானது
நாட்டு
நாட்டு
பாடல்
!.

ஆர்ஆர்ஆர் படம்
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியானது ஆர்ஆர்ஆர் படம். இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திர கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் 1000க்கும் மேற்பட்ட கோடிகளை வசூலித்து சாதித்தது.

இயக்குநர் ராஜமௌலி
சுதந்திர காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்திருந்தது ஆர்ஆர்ஆர் படம். இந்தப் படத்தின்மூலம் சுதந்திர காலகட்டத்தை சிறப்பாக பிரதிபலித்திருந்தார் ராஜமௌலி. ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருந்தனர்.

வரவேற்பை பெற்ற நாட்டு நாட்டு பாடல்
இந்தப் படத்தின் இசையமைப்பை பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளர் கீரவாணி மேற்கொண்டிருந்த நிலையில், அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. குறிப்பாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் பங்கு பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் சர்வதேச அளவில் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வு
இந்நிலையில் இந்தப் பாடல் தற்போது சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. ஆனால் சிறந்த திரைப்பட பிரிவில் ஆர்ஆர்ஆர் தேர்வாகவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த பிரிவில் அவதார் 2, டாப் கன் மேவரிக் மற்றும் எல்விஸ் படங்கள் தேர்வாகியுள்ளன.

சர்வதேச அங்கீகாரம்
இதனிடையே, ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் தேர்வான முதல் இந்திய பாடல் என்ற பெருமையை நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். இந்திய திரைப்படங்களுக்கான அங்கீகாரத்தை சர்வதேச அரங்கில் தற்போது ஆர்ஆர்ஆர் பெற்றுத் தந்துள்ளது.