சிங்கம் சிங்கிளாத் தான் வரும்.. ஐகான் விருதை பெற்ற சூப்பர்ஸ்டார்!

Recommended Video

எந்த இடம் சென்றாலும், வந்த இடம் மறவாதே - Rajinikanth

சென்னை: சாதாரண கண்டக்டர் தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களையும் ஆள முடியும் என்ற அதிசயம் சொடக்கு போட்ட நொடியில் நடக்கவில்லை. சொட்டு சொட்டாக பல உழைப்பு வியர்வைகள் சிந்திய பின்னர் தான் அந்த சூப்பர்ஸ்டார் நாற்காலி ரஜினிகாந்திடம் காந்தமாக ஒட்டிக் கொண்டது.

இன்று கோவாவில் துவங்கியுள்ள 50வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஐகான் ஆஃப் இந்திய சினிமா எனும் மணிமகுடம் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தேசிய விருது பெறாத நடிகர் ரஜினிகாந்துக்கு, இந்த தேசம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்துள்ளது.

பொன் விழா துவக்கம்

பொன் விழா துவக்கம்

கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பொன் விழா இன்று கோலாகலமாக துவங்கியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இந்தியளவில் டிரெண்டிங்

இந்தியளவில் டிரெண்டிங்

மத்திய அரசால் நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதான ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது வழங்கப்பட உள்ள தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள், இந்தியளவில் பிரைட் ஆஃப் இந்தியா ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஐகான் விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது தற்போது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருதினை வழங்கினர். அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.

வாழவைத்த தமிழ் மக்கள்

விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த், கோவா சர்வதேச திரைப்பட விழா மேடையில், "என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி" என தமிழில் தனது வணக்கத்தை தெரிவித்த ரஜினிகாந்த், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X