twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த முறையும் ஆஸ்கர் கனவு புஸ்... வெளியேறியது கல்லி பாய்

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த முறையும் இந்தியாவின் ஆஸ்கர் கனவு நொறுங்கிவிட்டது. கல்லி பாய் படம் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது.

    92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதில் சிறந்த சர்வேதச திரைப்படப் பிரிவில், இந்தியா சார்பில் பரிந்துரைப்பதற்கான கூட்டம், சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் நடந்தது.

    இதில், கல்லி பாய், ஆர்டிகல் 15, கேசரி, டியர் காம்ரேட், உரி: த சர்ஜிகல் ஸ்டிரைக், வடசென்னை உட்பட 28 படங்கள் போட்டிப்போட்டன. இறுதியில், கல்லி பாய் படத்தை ஆஸ்கருக்கு அனுப்புவது என்று முடிவானது.

    பட்டியல்

    பட்டியல்

    ரன்வீர் சிங், அலியா பட் நடித்திருந்த இந்த படத்தை, ஸோயா அக்தர் இயக்கி இருந்தார். இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பு, சிறந்த சர்வதேச பட பிரிவுக்கு, தேர்வான 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    கல்லி பாய் இல்லை

    கல்லி பாய் இல்லை

    அதில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கல்லி பாய் படம் இடம் பெறவில்லை. இதனால் இந்த வருடமும் இந்தியாவின் ஆஸ்கர் கனவு நொறுங்கிவிட்டது.

    படங்கள் விவரம்

    படங்கள் விவரம்

    ஆஸ்கர், ஷார்ட்லிஸ்ட் செய்துள்ள 10 சர்வதேச படங்கள் விவரம்: செக் குடியரசு நாட்டின், த பெயின்டட் பேர்ட், எஸ்டோனியாவின் ட்ரூத் அண்ட் ஜஸ்டிஸ், பிரான்ஸ் நாட்டின் லெஸ் மிசரபிள், ஹங்கேரியின் தோஸ் ஹூ ரிமைன்டு, போலந்தின் கார்பஸ் கிறிஸ்டி, செனகல் நாட்டின் அட்லாண்டிக்ஸ், மேக்டோனியாவின் ஹனிலேண்ட், தென் கொரியாவின் பாராசைட், ரஷ்யாவின் பியான்போல், ஸ்பெயினின் பெயின் அண்ட் குளோரி ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளன.

    தேர்வு

    தேர்வு

    இதில் இருந்து ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த சர்வதேச பட பிரிவில் விருது வழங்கப்படும்.

    English summary
    Zoya Akhtar’s Gully Boy, starring Ranveer Singh and Alia Bhatt, failed to make it to the next round of films shortlisted in the Best International Feature Film category in oscar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X