twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜப்பான்ல குடுத்தாக.. LATCHA லாஸ் ஏஞ்சல்ஸ்ல குடுத்தாக.. குவியும் அவார்டுகள்!

    |

    சென்னை: தேசிய விருது கிடைக்காவிட்டாலும் தமிழ் திரைப்படங்கள் உலக அரங்கில் ஏறி அவார்டுகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அளவிற்கு தரமான தமிழ் படங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக, இந்தியாவின் சார்பில் இந்தி படமான கல்லி பாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான தேர்வு பட்டியலில் தமிழிலிருந்து வட சென்னை, சூப்பர் டீலக்ஸ், பார்த்திபனின் ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    Ratsasan movie has won two LATCHA awards.

    கடந்த ஆண்டு வெளியான படங்களில் ரிலீஸின் போதே பாராட்டுக்களைப் பெற்ற படம் ராட்சசன். விஷ்ணு விஷால்-அமலா பால் நடித்த இப்படம், இப்போது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றும் விட்டது. இந்த படம் இரண்டு அவார்டுகளை வென்றுள்ளது - சிறந்த அதிரடி திரைப்படம் மற்றும் சிறந்த இசைக்காக 2019 ன் (Los Angeles Theatrical Release Competition & Awards) அவார்டை பெற்றுள்ளது.

    இது குறித்து புரடியூசர் ஜி.டில்லி தெரிவிக்கையில், இப்படம் தயாரிக்கும் போதே அனைவரின் இதயங்களை வெல்ல போவது உறுதி எனத் தெரியும். ஆனால் LATCHA போன்ற உலக அளவிலான பாராட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற பாராட்டுகள், எங்களை இது போன்ற நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று தூண்டுகிறது.

    Ratsasan wins LATCHA awards

    இசை அமைப்பாளர் ஜிப்ரான் தனது இசைப் பயணத்தில் இது ஒரு மைல் கல் எனவும், தனது பொறுப்புகள் தற்போது அதிகரித்துள்ளாகவும் சிலாகிக்கிறார். படத்தின் இயக்குநர் ராம்குமார், ராட்சசன் படத்திற்கு உலக அரங்கில் கிடைத்த வெற்றி ஒரு வரமாகும். தனி மனித வெற்றி அல்ல இது எங்கள் மொத்த குழுவினருக்கும் கிடைத்த வெற்றி என கூறினார்.!

    இதே போன்று இயக்குனர் சாய் வசந்த் இயக்கி உள்ள படம் சிவரஞ்சனியும் சில பெண்களும். இப்படத்தில் பார்வதி, லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

    Ratsasan movie has won two LATCHA awards.

    ஜப்பானில் நடைபெற்ற 28வது புகோகா சர்வதேச திரைப்பட விழாவில் 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது., விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து இயக்குனர் சாய் விருதை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்த பிரசித்தி பெற்ற புகோகா சர்வதேச திரைப்பட விழாவில் 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த அசோகமித்திரன், ஆதவன், மற்றும் ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களை பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன். என்றார்.

    English summary
    Ratsasan movie has won two LATCHA awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X