twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் 2020: தென்கொரியாவின் மின்சாரக் கண்ணா.. விருதுகளை குவித்த பாராசைட்டின் பரபர பின்னணி!

    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    சென்னை: தென் கொரியாவின் பாராசைட் படம் விருதுகளை குவித்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    உலக சினிமாவின் பெரும் திருவிழாவாக கொண்டாடப்படும் ஆஸ்கர் விருது விழா பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த விருது விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    ஆஸ்கர் விருதுகளுக்கு 24 பிரிவுகளின் கீழ் பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் தென்கொரியாவின் பாராசைட் படம் 4 விருதுகளை குவித்து இந்த ஆண்டுக்கான அதிக ஆஸ்கர் விருதுகளை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    பாராசைட் படம்

    பாராசைட் படம்

    தென் கொரியாவின் பாராசைட் படம் அதிக விருதுகளை குவித்துள்ள நிலையில் அதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக இப்போதே விமர்சனங்கள் எழுந்துள்ளன. பத்தோடு பதினொன்றாக சாதாரண கதைக்களத்தை கொண்ட படம் தான் பாராசைட். தமிழில் ஒட்டுண்ணி என அர்த்தம் கொண்ட இந்தப் படத்தில் ஏழ்மையின் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு குடும்பம் பணக்கார குடும்பத்தில் ஒட்டுண்ணியாய் ஒட்டி வளர நினைப்பதே படத்தின் கதை.

    மின்சாரக்கண்ணாவை போல

    மின்சாரக்கண்ணாவை போல

    இதற்காக போலி சான்றிதழ்களை தயார் செய்து பணக்கார வீட்டில் வேலைக்கு சேரும் இளைஞன், அங்கிருப்பவர்களின் வேலைக்கு வேட்டு வைத்து விட்டு, தனது குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரையும் உள்ளே இழுத்து பணியில் அமர்த்துகிறான். இதன் இறுதியாக இரு குடும்பமும் பல இழப்புகளை சந்திக்கிறது. இந்தப் படம் தமிழில் 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மின்சாரக்கண்ணா படத்தை ஒத்திருப்பதாக உள்ளது.

    அசத்திய இயக்குநர்

    அசத்திய இயக்குநர்

    தென் கொரிய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் போங் ஜூன் ஜோ, தனது படங்களின் மூலம் ஏழை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதைப் போலவே இந்த படத்திலும் சாதாரண ஒரு கதைக்கருவை மிக எதார்த்தமாக காட்சியாக்கி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். பின்னணி இசை, தொழில் நுட்பம் என பெரிதாக இல்லாத நிலையில் பக்கா ஸ்க்ரீன் ப்ளேவால் அசத்தியிருக்கிறார்.

    கேலி செய்த இயக்குநர்

    கேலி செய்த இயக்குநர்

    அதோடு உலக நாடுகளை தனது அணுகுண்டு சோதனைகளால் மிரள விட்டுவரும் தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னையும் பல இடங்களில் அசால்ட்டாக வசனங்களின் மூலம் கேலி செய்திருக்கிறார். மேலும் பல ஆண்டுகளாக உள்ள வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளையும் நக்கலான வசனங்களின் மூலம் துணிச்சலாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

    பல காரணங்கள்

    பல காரணங்கள்

    சாதாரண கதை என்றாலும் பல டிவிஸ்டுகள் மற்றும் திருப்பு முனைகள் என பரபரப்பான காட்சிகளுடன் பாராசைட்டை பதற வைத்திருக்கிறார் இயக்குநர் போங்க் ஜூன் ஹோ. இந்தப் படத்தை அந்த அளவுக்கு கொண்டாட வேண்டிய தேவையில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    கிம்மை கூல் செய்ய

    கிம்மை கூல் செய்ய

    அணுகுண்டு சோதனைகளால் அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவரும் தென்கொரிய அதிபர் கிம்மை படத்தின் பல இடங்களில் கிண்டல் செய்திருப்பதற்காக பாராசைட் படம் இந்த அளவுக்கு கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.அதேநேரத்தில் அமெரிக்காவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வரும் தென்கொரியாவை கூல் செய்யும் முயற்சியாகவும் இந்த படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வரலாற்றில் இடம்

    வரலாற்றில் இடம்

    ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆங்கிலம் அல்லாத ஒரு கொரிய மொழி படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. தென் கொரிய படமான பாராசைட் படம் சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் என 4 விருதுகளை அள்ளி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Korean Movie Parasite wins 4 Oscar awards. Parasite movie gets award for best screen play, best international movie, best director and best Movie. Reasons revealed why Parasite movie got more awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X