Saindhavi: ஜி.வி. பிரகாஷுக்கு விருது.. ஓயாமல் கைதட்டிய சைந்தவி.. லவ் இன்னும் அப்படியே இருக்குப்பா!

சென்னை: 22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா நேற்று அதாவது, டிசம்பர் 19ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த 12ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வந்த இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இறுதி நாளில் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில், சிறந்த இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் அமர்ந்திருந்த பாடகியும், ஜி.வி. பிரகாஷ்ஷின் முன்னாள் மனைவியுமான சைந்தவி உற்சாகமாக கைதட்டினார். இந்த நிகழ்வு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இசை அமைப்பாளராக கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு மிகச்சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. கேப்டன் மில்லர் தொடங்கி, தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் என இசைக்காகவே தனி பாராட்டுக்களைப் பெற்ற படங்களைக் கொடுத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். மேலும் அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் தீபாவளிக்கு ஒருசேர ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்களால் மட்டும் இல்லாமல், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

saindhavi gv prakashkumar amaran

அதேபோல் தங்கலான் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. தங்கலான் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் மிகவும் சிரமப்பட்டு, பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் இணைந்துள்ள, அவர்கள் பயன்படுத்தும் இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசை அமைத்து பிரமிப்பில் ஆழ்த்தினார். இதுமட்டும் இல்லாமல், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இவர் இயற்றி, ரிலீஸ் செய்யப்பட்ட கோல்டன் ஸ்பேரோவ் பாடலும் செம ஹிட் அடித்தது.

ஜி.வி. பிரகாஷ்குமார்: இப்படியான நிலையில், அமரன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் பாராட்டைப் பெற்ற நிலையில், 22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதினை அமரன் படத்திற்காக ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றார். இந்த விருதினை அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட பலர் இணைந்து வழங்கினர். விருதினை ஜி.வி. பிரகாஷ்குமார் பெரும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.

விவாகரத்து: அப்போது மேடையில் அமர்ந்திருந்த பாடகியும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் முன்னாள் மனைவியுமான சைந்தவி, வெகு உற்சாகமாக, ஓயாமல் கைகளைத் தட்டினார். இது பலரது கவனத்தினை ஈர்த்தது. ஜி.வி. பிரகாஷ்குமாரும் சைந்தவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், இந்த ஆண்டு மே மாதம் தாங்கள் பிரிவதாக கூட்டாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

காதல்: அண்மையில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடத்திய இசைக் கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடினார். இதனால், இருவரும் இணைந்து விடுவார்கள் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தது. அதேநேரத்தில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் அம்மாவும் இருவரும் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சிதான் எனத் தெரிவித்தார். இப்படியான நிலையில், விருது விழாவில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்காக சைந்தவி வேகமாக கைதட்டி உற்சாகப்படுத்தியிருப்பதைப் பார்த்த ரசிகர்கள், என்னதான் விவாகரத்துனு சொல்லி பிரிஞ்சுட்டாலும், உள்ளுக்குள்ள அந்த காதல் இருக்கத்தானே செய்யும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X