சூர்யா, சந்தியாவுக்கு பிலிம்பேர் விருது!
பேரழகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சூர்யாவுக்கும், காதல் படத்தில் அருமையாக நடித்ததற்காக சந்தியாவுக்கும்பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது.
பிலிம்பேர் பத்திரிக்கை சார்பில் ஆண்டுதோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்தகலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில், சிறந்த நடிகராக சூர்யாவும், நடிகையாக சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகராக மாதவன்(ஆய்த எழுத்து), துணை நடிகை மல்லிகா (ஆட்டோகிராப்), வில்லன் பிரகாஷ் ராஜ் (கில்லி),
நகைச்சுவை நடிகர் விவேக் (பேரழகன்), இசையமைப்பாளர் பரத்வாஜ் (ஆட்டோகிராப்), யுவன் ஷங்கர் ராஜா (7ஜிரெயின்போ காலனி) ஆகியோர் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை கூட்டாக பெறுகிறார்கள்.
சிறந்த படமாக ஆட்டோகிராப் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்குமொழிகளிலும் சிறந்த பாடகியாக சித்ரா தேர்வாகியுள்ளார். சிறந்த புதுமுக நடிகராக ரவி கிருஷ்ணா, சிறந்த நடன ஆசிரியராகராஜு சுந்தரம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவுக்கும், திரைப்பட அதிபர் ராமோஜி ராவுக்கும்வழங்கப்படுகிறது.
வருகிற 23ம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











