எம்ஜிஆர்- சிவாஜி அவார்ட்.. நடிகர் சதீஷ் மகிழ்ச்சி
சென்னை : 2019ம் ஆண்டுக்காக எம்ஜிஆர்-சிவாஜி அகாடமி அவார்ட் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு வழங்கப்பட்டது.
Recommended Video
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் 2019ல் பல படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். தற்போது அதற்காக இவருக்கு சிறந்த கௌரவிப்பு நடந்திருக்கிறது .

நடிகர் சதீஷ் 2019ல் பூமராங், ஜீலை காற்றில், அக்னி விஸ்சஸ் தேவி ,மிஸ்டர் லோக்கல் ,கொரில்லா,சிக்சர் மற்றும் அருவம் படங்களில் நடித்து இருந்தார். இதில் கொரில்லா மற்றும் சிக்சர் படத்திற்காக வி4 எண்டர்பிரைசஸ் சார்பில் எம்ஜிஆர் சிவாஜி அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது .
எம்ஜிஆர்-சிவாஜி அகாடமி அவார்ட்ஸ் வருடாவருடம் நடைப்பெற்று வருகிறது. இந்த வருடம் நடைப்பெற்ற விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் பலருக்கும் விருது வழங்கப்பட்டது .இதுவே நடிகர் சதீஷ்க்கு முதல் எம்ஜிஆர்-சிவாஜி அகாடமி விருதாகும்.

நடிகர் சதீஷ் சிறந்த நகைச்சுவை கலைஞர் என்ற விருதை எதிர்நீச்சல் படத்திற்காக விஜய் அவார்ட்ஸ்ல் வென்று இருந்தார், அதற்கு பிறகு 4 படங்களுக்காக நான்கு எடிசன் விருதுகளை வென்று இருக்கிறார் . மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்குள் வந்த சதீஷ்க்கு இதுவரையிலும் குறைந்த அளவிலான விருதுகளே வழங்கப்பட்டு இருக்கிறது .
விருதுகளை பற்றி கவலை கொள்ளாத சதீஷ் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 2020ல் இவர் நடித்த நான்கு படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது. மேலும் 8 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் .
இதில் மிக முக்கியமான படங்கள் என்றால் ஜெயம் ரவியின் பூமி , டிக் டிக் டிக் இயக்குனரின் டெடி மற்றும் சூப்பர் ஸ்டாரின் படம் என்று பெரிய வருடத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார் சதீஷ். மேலும் நல்ல படங்களில் நடித்து அடுத்த ஆண்டும் விருதுகளை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











