வோக் விருது விழா: வாவ் ஷில்பா, முடியலை நேஹா, என்னாச்சு இலியானா
மும்பை: மும்பையில் நடந்த வோக் விருது விழாவுக்கு பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் அசத்தலாக வந்திருந்தனர்.
வோக் விருது விழா மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விருது விழாவுக்கு பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷில்பா ஷெட்டி, அதிதி ராவ் ஹைதரி, லிசா ஹேடன் உள்ளிட்டோர் கலக்கலாக வந்திருந்தனர்.
வோக் விழாவுக்கு யார், யார் எப்படி வந்தார்கள் என்று பார்ப்போம்.

கஜோல்
இரண்டு குழந்தைகளின் தாயான கஜோல் வெள்ளை நிற ஆடையில் வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் லேஸ் ஸ்கர்ட், கருப்பு நிற மேலாடையில் வந்திருந்தார். அந்த உடை அவருக்கு அம்சமாகத் தான் இருந்தது.

அதிதி
அதிதி ராவ் ஹைதரிக்கு விருது விழாக்களுக்கு எந்த ஆடையில் வந்தால் அசத்தலாக இருக்கும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது.

பரினீத்தி
பரினீத்தி சோப்ரா கருப்பு நிற ஜம்ப் சூட்டில் வந்திருந்தார். அவருக்கு அந்த ஆடை ஓகே என்று வேண்டுமானால் கூறலாம்.

ஹூமா குரேஷி
நடிகை ஹூமா குரேஷி கருப்பு நிற ஆடையில் வந்திருந்தார். என்னமோ மிஸ்ஸிங் ஹூமா.

திபன்னிதா
சூப்பர் மாடலும், நடிகையும் திபன்னிதா ஷர்மா அணிந்திருப்பது கவுன் எல்லாம் இல்லை சேலை. அட நம்புங்கப்பா.

ஷில்பா
ஷில்பா வழக்கம் போல சூப்பராக வந்து அனைவரையும் அசர வைத்துவிட்டார். கீப் இட் அப் ஷில்பா.

லிசா
நடிகை லிசா ஹேடன் வெள்ளை நிற கவுனில் சிம்பிளாக வந்திருந்தார்.

நிம்ரத்
லஞ்ச் பாக்ஸ் படம் புகழ் நிம்ரத் கவுரின் கவுனை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவரின் மேக்கப்பை அதுவும் லிப்ஸ்டிக் கலரை பார்த்தால் தான் முடியலை.

இலியானா
இஞ்சி இடுப்பழகி இலியானா ஸ்ட்ராப்லெஸ் கவுனில் அழகாக வந்திருந்தார். என்ன இடுப்பு பகுதியில் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் உடை அணிந்திருக்கலாம். கர்ப்பிணிகள் அணியும் கவுன் போன்றாகிவிட்டது. என்னாச்சு இலி?

க்ரிட்டி
நடிகை க்ரிட்டி கோடு போட்ட கவுனில் அழகாகவே உள்ளார்.

கியாரா
நடிகை கியாரா அத்வானி வாவ் என்று கூறும்படி அழகாக வந்திருந்தார்.

ட்விங்கிள்
அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் இரண்டாவது குழந்தைக்கு பிறகு வெயிட் போட்டுள்ளார். அதனால் தனது உடல் வாகுக்கு ஏற்ற ஆடையை அணிந்துள்ளார்.

நேஹா
மாடலும், நடிகையுமான நேஹா தூபியாவின் லுக் நன்றாக இல்லை என்று தான் கூற வேண்டும். இதில் முடியில் வெள்ளை நிற டை வேறு. நல்லா தானே டிரஸ் பண்ணுவீங்க நேஹா இப்போ என்ன?

தாரா சர்மா
நடிகை தாரா சர்மா சிவப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார்.

டிஸ்கா
நடிகை டிஸ்கா சோப்ரா கருப்பு நிற சட்டை மற்றும் பளபளக்கும் பேண்ட்டில் அழகாக உள்ளார் என்று தான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications











