உலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது: எதற்கு தெரியுமா?

By Siva

Recommended Video

உலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது..வீடியோ

டாவோஸ்: டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் ஹாலிவுட் நடிகை கேட் பிளான்செட், பாடகர் எல்டன் ஜானுக்கும் விருது வழங்கப்பட்டது.

சமூக சேவை

சமூக சேவை

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை, தொழிற்பயிற்சி அளிப்பதுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்து வருகிறார் ஷாருக்கான்.

பாராட்டு

பாராட்டு

ஷாருக்கான் தன்னுடைய மீர் பவுன்டேஷன் மூலம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கும் உதவி செய்து வருகிறார். அவரின் இந்த சேவையை பாராட்டி தான் விருது வழங்கப்பட்டுள்ளது.

எல்டன் ஜான்

எல்டன் ஜான்

இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியுள்ள ஹாலிவுட் நடிகை கேட் பிளான்செட் அகதிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார். எல்டன் ஜான் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

அமிதாப்

அமிதாப்

உலக பொருளாதார மாநாட்டில் வழங்கப்படும் கிறிஸ்டல் விருதை முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஷபானா ஆஸ்மி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ரவி சங்கர், அம்ஜத் அலி கான் ஆகிய இந்தியர்கள் பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X