விஜய் அவார்ட்ஸில் ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது

By Siva

சென்னை: பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கவிருக்கிறார்களாம்.

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் நேற்று தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்படவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தியா சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இயக்குனர் கே. பாலசந்தர், ரஜினிகாந்த், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கமல் ஹாசன், மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் செவாலியே சிவாஜி கணேசன் விருது பெற்றுள்ளனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு அரங்கில் நாளை நடக்கிறது.

சிவாஜி விருது வாங்கும் முதல் இந்தி நடிகர்

சிவாஜி விருது வாங்கும் முதல் இந்தி நடிகர்

செவாலியே சிவாஜி கணேசன் விருது வாங்கும் முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் டான்ஸ் இல்லை

ஷாருக் டான்ஸ் இல்லை

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஷாருக்கான் நடனமாடமாட்டார் என்று தெரிகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

விருது நிகழ்ச்சியில் தான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தை ஷாருக் விளம்பரப்படுத்துகிறார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட உள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸில் ஆச்சி

சென்னை எக்ஸ்பிரஸில் ஆச்சி

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தமிழ் திரை நட்சத்திரங்களான சத்யராஜ், ஆச்சி மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர். பிரியாமணி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

கமல் வருகிறார்

கமல் வருகிறார்

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்கின்றனர்.

ரஜினியை அழைத்த விஜய் டிவி

ரஜினியை அழைத்த விஜய் டிவி

விஜய் டிவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X