»   »  சிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்

சிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு(சிமா விருது) விஜய்யின் துப்பாக்கி படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. இந்த விருது கடந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு நடக்கும் விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

துப்பாக்கி

துப்பாக்கி

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு விஜய்யின் துப்பாக்கி படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், நகைச்சுவை நடிகர் உள்பட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3

3

தனுஷ், ஸ்ருதி ஹாஸன் நடித்த 3 படம் சிறந்த நடிகர், நடிகை உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கும்கி

கும்கி

விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடித்த கும்கி படம் சிறந்த படம், இயக்குனர், புதுமுக ஹீரோ உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பறவை

நீர்ப்பறவை

விஷ்ணு நடித்த நீர்ப்பறவை படம் சிறந்த நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9

வழக்கு எண் 18/9 படம் சிறந்த படம், இயக்குனர், புதுமுக நடிகை, குணச்சித்திர நடிகை, ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பீட்சா

பீட்சா

விஜய் சேதுபதி நடித்த பீட்சா படம் சிறந்த படம், நடிகர், புதுமுக இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன்

சசிகுமார், லக்ஷ்மி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் படம் சிறந்த படம், புதுமுக இயக்குனர், நகைச்சுவை நடிகர் உள்பட 5 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓகே ஓகே

ஓகே ஓகே

உதயநிதி ஸ்டாலின் ஹீரோ அவதாரம் எடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சிறந்த புதுமுக ஹீரோ, சிறந்த நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாற்றான்

மாற்றான்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த மாற்றான் சிறந்த நடிகர், இயக்குனர் உள்பட 4 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நண்பன்

நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படம் சிறந்த பாடல் ஆசிரியர் மற்றும் ஸ்டண்ட் பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தாண்டவம்

தாண்டவம்

விக்ரம் நடித்த தாண்டவம் படம் சிறந்த பாடல் ஆசிரியர் மற்றும் ஸ்டண்ட் பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிற படங்கள்

பிற படங்கள்

தோனி, காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், மெரினா, அட்டகத்தி உள்ளிட்ட படங்களும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

English summary
South Indian International Movie Awards (SIIMA) 2013, is all set to honour the best cinematic personalities for the second time. SIIMA nominations list is announced and it should be noted that Vijay's Thuppakki has bagged 10 nominations.
Please Wait while comments are loading...