SIIMA 2023: கெத்து காட்டிய கமல், த்ரிஷா, லோகேஷ்... சைமா விருதுகள் 2023 முழுமையான லிஸ்ட் இதோ!
துபாய்: 2023ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது.
தமிழில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதை வென்று இளம் ஹீரோக்களுக்கே சவால் விடுத்துள்ளார்.
அதேபோல், த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருதை வென்று, சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளார்.

சைமா விருதுகள் முழு லிஸ்ட்: 2023ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
2023க்கான சைமா விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உலக நாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்திருந்தார் கமல். ஆக்ஷனுடன் தனது தனித்துவமான நடிப்பில் மிரட்டிய கமல், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல' பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும் வென்று அசத்தினார்.
அதேபோல், சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார் த்ரிஷா. ஐஸ்வர்யா ராய்க்கு சவால் விடும் வகையில் நடித்த த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருது வென்று கம்பேக் கொடுத்துள்ளார். சிறந்த படத்துக்கான விருதையும் பொன்னியின் செல்வன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருதை இயக்குநர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.
சிறந்த அறிமுக நடிகருக்கான விருது லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கும், சிறந்த அறிமுக நடிகை விருது, விருமன் படத்தில் நடித்த அதிதி ஷங்கருக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த வில்லன் நடிகர் விருதை டான் படத்திற்காக எஸ்ஜே சூர்யா வென்றார். சிறந்த துணை நடிகர் விருது கார்கி படத்தில் நடித்த காளி வெங்கட்டுக்கும், சிறந்த துணை நடிகை விருது, விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவாக மிரட்டிய டான்ஸர் வசந்திக்கும் வழங்கப்பட்டன.
அதேபோல், சிறந்த காமெடி நடிகருக்கான விருது லவ் டுடே படத்தில் நடித்த யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டது. ராக்கெட்ரி படத்தில் நடித்த மாதவனுக்கு ஸ்பெஷல் விருது கொடுக்கப்பட்டது. இதுதவிர மேலும் பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்பட்டன. தெலுங்கில் சிறந்த இயக்குநர் விருதை ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக ராஜெமளலி வென்றார். சிறந்த தெலுங்கு படமாக சீதா ராமம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











