சிமா விருது 2014: 3 விருதுகள் பெற்ற சிம்பு, அதில் ஒன்று தனுஷ் உடையது

By Siva

சென்னை: சிமா விருது விழா 2014ல் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு கிடைத்தது. விருதை அவருக்கு பதிலாக சிம்பு பெற்றுக் கொண்டார்.

சிமா விருது விழா 2014 மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கௌரவிக்கப்பட்டார்.

விழாவில் கோலிவுட்டுக்கு கிடைத்த விருது விவரங்களை பார்ப்போம்.

தனுஷ்

தனுஷ்

சிறந்த நடிகருக்கான விருது மரியான் படத்திற்காக தனுஷுக்கு கிடைத்தது. விருதை அவருக்கு பதிலாக அவரது நண்பர் சிம்பு பெற்றுக் கொண்டார்.

த்ரிஷா

த்ரிஷா

சிறந்த நடிகைக்கான விருது என்றென்றும் புன்னகை படத்திற்காக த்ரிஷாவுக்கு கிடைத்தது.

அனிருத்

அனிருத்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது எதிர்நீச்சல் படத்திற்காக அனிருத்துக்கு கிடைத்தது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அனிருத் இந்த விருதைப் பெற்றுள்ளார்.

ஆர்யா

ஆர்யா

ஆரம்பம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது ஆர்யாவுக்கு கிடைத்தது.

தன்ஷிகா

தன்ஷிகா

சிறந்த துணை நடிகைக்கான விருது பரதேசியில் நடித்த தன்ஷிகாவுக்கு கிடைத்தது.

சூரி

சூரி

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்த சூரிக்கு கிடைத்தது.

சிம்பு

சிம்பு

சிம்புவுக்கு தென்னிந்திய சினிமாவின் ஸ்டைல் ஸ்டார் விருதும், தெலுங்கில் சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விருது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை விருது லக்ஷ்மி மேனனுக்கு கிடைத்தது.

அமலா பால்

அமலா பால்

இந்த ஆண்டின் சிறந்த ஜோடி விருது இயக்குனர் விஜய், அமலா பாலுக்கு கிடைத்தது.

கார்த்திக், குஷ்பு

கார்த்திக், குஷ்பு

நடிகர் கார்த்திக், குஷ்பு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் வந்து விழாவில் கலந்து கொண்டார்.

ஸ்ரியா

ஸ்ரியா

நடிகை ஸ்ரியா விருது விழாவில் நடனம் ஆடினார்.

தேவிஸ்ரீ பிரசாத்

தேவிஸ்ரீ பிரசாத்

தேவிஸ்ரீ பிரசாத்துக்கு தெலுங்கில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது.

சோபி

சோபி

சிறந்த நடன அமைப்பாளர் விருது ஆரம்பம் படத்திற்காக சோபிக்கு கிடைத்தது.

பாக்யராஜ்

பாக்யராஜ்

வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர் கே. பாக்யராஜுக்கு கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X