மலேசியாவில் சிமா விருது விழா: மறுபடியும் ஜோடி போட்ட த்ரிஷா, ராணா
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் சிமா விருது விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
சிமா விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. விழா இன்று மாலை துவங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் கோலாலம்பூர் சென்றுள்ளனர்.
விழாவுக்கு யார் யார் சென்றிருக்கிறார்கள், அங்கு யார் நடனம் ஆடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அமலா பால்
அமலா பால் தனது கணவர் விஜய்யுடன் சிமா விருது விழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்றுள்ளார்.

த்ரிஷா,ராணா
த்ரிஷாவும், அவரது காதலர் என்று கூறப்படும் நடிகர் ராணாவும் ஜோடியாக சென்றுள்ளனர். கடந்த ஆண்டு சிமா விழாவில் அவர்கள் புதுமணத் தம்பதி போன்று பின்னிப் பிணைந்தது தான் பேச்சாக கிடந்தது.

பாக்யராஜ்
இயக்குனர், நடிகர் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

சிம்பு, ஸ்ரியா
விருது விழாவில் சிம்பு, தமன்னா, தேவிஸ்ரீ பிரசாத், லக்ஷ்மி மேனன், ஷிவராஜ்குமார், ஸ்ரியா சரண், நிவின் பாலி, ரெஜினா கசாண்ட்ரா, ஆதா சர்மா, இஷா தல்வார் உள்ளிடோர் நடனமாடுகிறார்கள்.

சிரு, ஸ்ரீதேவி
விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கௌரவிக்கப்படுகிறார். விழாவில் ஸ்ரீதேவி, போனி கபூர், தனுஷ், சிவகார்த்திகேயன், ப்ரித்விராஜ், விக்ரம் பிரபு, ஆர்யா, ஹன்சிகா, லக்ஷ்மி மஞ்சு, நானி, அனிருத், ராதிகா சரத்குமார், பிரியாமணி, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











