»   »  சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்... சிறந்த நடிகை நயன்தாரா

சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்... சிறந்த நடிகை நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா 2016 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா. சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார்.

தென்னிந்திய திரையுலகினரை கவுரவித்து வழங்கப்படும் 'சைமா 2016' விருது கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

SIIMA Awards 2016: Vikram, Nayanthara, Nithya Menon

தென்னிந்தியாவின் யூத் ஐ கான் விருது நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்:

சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)

சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)

சிறந்த படம் : தனி ஒருவன்

சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரவுடிதான்)

சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் (நானும் ரவுடிதான்)

சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (ஓ காதல் கண்மணி)

சிறந்த வில்லன் நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)

சிறந்த காமெடி நடிகர் : ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)

சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)

சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)

சிறந்த துணை நடிகர் : பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)

சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)

சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (படம்: நானும் ரவுடிதான்)

சிறந்த பின்னணி பாடகி : ஸ்வேதா மோகன் ( படம்: தங்கமகன்)

சிறந்த விமர்சக நடிகர் : ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த விமர்சக நடிகை : நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)

தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா.

வாழ்நாள் சாதனையாளர் விருது : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலம்


English summary
Chiyaan Vikram won Best actor at SIIMA 2016 Nayanthara won best actress award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil