twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Siima Awards 2019: ‘அன்பு’க்கு அங்கீகாரம்.. ‘ஜானு’வுக்கு விருது.. ‘குறும்பா’வுக்கு லக்கி பிரைஸ்!

    சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு கிடைத்தது.

    |

    சென்னை: கத்தாரில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில், அடங்கமறு படத்திற்காக நடிகர் ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், 96 படத்துக்காக திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

    நான்கு மொழி சினிமாக்களில் இருந்து ஏராளமான நட்சத்திரங்கள் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

    சைமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இரண்டாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதல் நாளாக ஆகஸ்ட் 15ம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டன.

    சிறந்த நடிகர் தனுஷ்

    சிறந்த நடிகர் தனுஷ்

    வடசென்னை படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதினை 96 படத்திற்காக திரிஷா பெற்றார். இதில் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது ஜெயம் ரவிக்கு வழங்கபட்டது. அடங்கமறு படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    ஜெயம்ரவி மகன்

    ஜெயம்ரவி மகன்

    அதே பிரிவில், சிறந்த நடிகைக்கான விருது கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. டிக்டிக்டிக் படத்தில் நடித்த ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.

    சிறப்பு ஜூரி விருது

    சிறப்பு ஜூரி விருது

    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை தட்டிச் சென்றது. அந்த படத்தில் நடித்த கதிருக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. சர்கார் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லத்தனம் செய்த வரலட்சுமி, சிறந்த வில்லியாக அறிவிக்கப்பட்டார்.

    நெல்சன்

    நெல்சன்

    கோலமாவு கோகிலா படத்தில் எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்த யோகி பாபுவுக்கு சிறந்த காமெடியன் விருது வழங்கப்பட்டது. அந்த படத்திற்கு இசையமைத்த அனிருத், சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்படத்தை இயக்கிய நெல்சன், சிறந்த அறிமுக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    60 வயது மாநிறம் படத்திற்காக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. சொடக்கு மேல பாடலை பாடிய அந்தோணி தாசன் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வழங்கப்பட்டது. அதேபோல் ரவுடி பேபி பாடலை பாடிய தீக்ஷிதாவுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது.

    விக்னேஷ் சிவன்

    விக்னேஷ் சிவன்

    இதேபோல் தானா சேர்ந்த கூட்டம் பாடலை எழுதியதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளராக இமைக்கா நொடிகள் கேமரா மேன் ஆர்.டி.ராஜசேகர் தேர்வாகியுள்ளார்.

    English summary
    In SIIMA awards 2019, actor Dhanush received the best actor award for Vadachennai, whereas Trisha gets best actress award for 96. Jayam Ravi, Aishwarya Rajesh and many more bagged the awards this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X