twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    SIIMA Awards 2022: மாஸ் காட்டிய சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா… முழு விருது பட்டியல் இதோ

    |

    பெங்களூரு: தமிழில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கான SIIMA விருதுகள் வழங்கப்பட்டன.

    பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது நாள் விழாவில், தமிழ், மலையாள படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

    சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!SIIMA விருதுகள்: சிறந்த நடிகர் விருதை இரண்டாவது முறையாக வென்று அசத்திய புஷ்பா நாயகன்!

    சைமா விருதுகள் 2022

    சைமா விருதுகள் 2022

    10வது ஆண்டாக நடைபெறும் திரைப்படங்களுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த விழாவில், முதல் நாளில் தெலுங்கு, கன்னட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற விழாவில், தமிழ், மலையாளம் படங்களுக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

    தமிழில் சிறந்த படம், சிறந்த இயக்குநர்

    தமிழில் சிறந்த படம், சிறந்த இயக்குநர்

    பெங்களூருவில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ஆர்யா, அரவிந்த் சாமி, மிர்ச்சி சிவா, யோகிபாபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழில் சிறந்த திரைப்படமாக பா ரஞ்சித் இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' தேர்வானது. இந்த விருதை நடிகர் ஆர்யா பெற்று கொண்டார் அதேபோல், சிறந்த இயக்குநருக்கான விருதை விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வென்றார். சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது 'மண்டேலா' படத்தின் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த நடிகர், நடிகை விருதுகள்

    சிறந்த நடிகர், நடிகை விருதுகள்

    சிறந்த நடிகர்களுக்கான விருதில் தமிழில் பலத்த போட்டி நிலவியது. இதில், 'மாநாடு' படத்திற்காக சிம்பு சிறந்த நடிகர் விருதை வென்று அசத்தினார். அதேபோல், 'டாக்டர்' படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகர் விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் சார்பட்ட பரம்பரையில் நடித்த ஆர்யாவுக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த வில்லன் விருதை, மாநாடு படத்தில் நடித்ததற்காக எஸ்ஜே சூர்யா வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருது 'தலைவி' படத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கும், அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபாமன்ஸ் விருது யோகி பாபுவுக்கும், சிறந்த காமெடி நடிகர் விருது ரெடின் கிங்ஸ்லிக்கும் வழங்கப்பட்டன.

    சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர்

    சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர்

    அதேபோல், சிறந்த நடிகைக்கான விருதை தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் வென்றார். 'திட்டம் இரண்டு' படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்கள் சாய்ஸில் சிறந்த நடிகையாக தேர்வானார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் பெற்றார். 'கர்ணன்' படத்திற்காக, சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றார். சிறந்த பின்னணி பாடகர் விருது கபிலனுக்கும், பாடகி விருது தீ-க்கும் வழங்கப்பட்டன. ரக்கி திரைப்பட சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றது. 'நெற்றிக்கண்' படத்தில் இடம்பெற்ற 'இதுவும் கடந்து போகும்' பாடலுக்காக, கார்த்திக் நேத்தா சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.

    English summary
    The second day of the SIIMA Awards was held in Bengaluru. In Tamil, Simbu, Sivakarthikeyan were chosen as the best actors. The films Karnan, Sarpatta Parambarai, Maanadu, Master and Doctor have also received awards. Here is the complete list of Tamil SIIMA Awards
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X