Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிவாஜி கணேசன் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சரோஜாதேவிக்கு சிவாஜி விருது
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92ஆவது பிறந்தநாள் நாளை அக்டோபர் 1ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. நாளை மாலை 6 மணியளவில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடிகை சரோஜா தேவி, நடிகை ராஜஸ்ரீ, ஏ.ஆர்.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளார் பாபு ஆகியோருக்கு டாக்டர்.சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் நாளை அக்டோபர் 1ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. திரையுலகம் சார்பிலும் சென்னையில் நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் திரையுலகத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் / பொது இடத்தில், நடிகர்திலகத்தின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவிக்கப்பட்டும், ரத்ததானம், அன்னதானம், போன்ற சமூக நலப்பணிகளும் நடைபெறுகின்றன.
சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது
நாளை காலை 9.30 மணிக்கு, நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.
நாளை காலை 10.30 மணியளவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடிகர்திலகம் சிவாஜி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை மாலை 6 மணியளவில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறும் சிவாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் டாக்டர் பிரதாப் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில் அபிநய சரஸ்வதி என்றழைக்கப்படும் சரோஜா தேவி, நடிகை ராஜஸ்ரீ, ஏ.ஆர்.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளார் பாபு ஆகியோருக்கு டாக்டர்.சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படவிருக்கிறது.