twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா.. சிவகார்த்திகேயன் சொன்ன சூப்பர் சீக்ரெட்!

    |

    சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவை பாராட்டி சிவகார்த்திகேயன் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

    பட்டிமன்றம் என்றாலே பேராசிரியர் சாலமன் பாப்பையா தான் மக்கள் நினைவுக்கு வரும் முதல் நபர் என்றே சொல்லலாம்.

    இந்த தீபாவளிக்கு கூட சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர் சாலமன் பாப்பையா.

     தினமும் ஒரு திருக்குறள்.. ட்விட்டரில் கலக்கும்.. சாலமன் பாப்பையா ! தினமும் ஒரு திருக்குறள்.. ட்விட்டரில் கலக்கும்.. சாலமன் பாப்பையா !

    60 ஆண்டுகால தமிழ்த் தொண்டு

    60 ஆண்டுகால தமிழ்த் தொண்டு

    85 வயதாகும் சாலமன் பாப்பையா 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய தொண்டாற்றி வருகிறார். பேராசிரியர் சாலமன் பாப்பையா என்றும் பட்டிமன்ற நடுவர் பாப்பையா என்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் சாலமன் பாப்பையா. தினம் ஒரு திருக்குறள் என சன் டிவியில் நீண்ட நாட்கள் திருக்குறள் பற்றிய விளக்க உரையும் வழங்கி வந்தவர் சாலமன் பாப்பையா.

    12 ஆயிரம் பட்டிமன்றம்

    12 ஆயிரம் பட்டிமன்றம்

    உலகம் முழுக்க 12 ஆயிரம் பட்டிமன்றங்களை நடத்தி பிரபலமானவர் சாலமன் பாப்பையா. பண்டிகை நாட்கள் என்றாலே பாப்பையவின் பட்டிமன்றம் தான் இன்றளவும் ரசிகர்களுக்கு பிடித்த சிறப்பு நிகழ்ச்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது அணியில் பேசும் நட்சத்திர பேச்சாளர்களான ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ரசிகர்களின் ஃபேவரைட்.

    கலைமாமணி விருது

    கலைமாமணி விருது

    தமிழ் அறிஞர், இயல் கலை அறிஞர் என அழைக்கப்படும் சாலமன் பாப்பையாவுக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2000ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2010ல் அண்ணாமலை பல்கலைக் கழகம் முத்தமிழ் பேரறிஞர் விருது வழங்கி சிறப்பித்தது. இந்நிலையில், சாலமன் பாப்பையாவுக்கு தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    Recommended Video

    ELEPHANT CALL SHEETக்காக காத்திருந்தோம் |Director Prabhu Solomon Talk Part-2 | Filmibeat Tamil
    பத்மஸ்ரீ விருது

    பத்மஸ்ரீ விருது

    இந்திய அரசால் தலை சிறந்த கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கங்கனா ரனாவத், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி, பாடகி சித்ரா உள்ளிட்ட பலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு குடியரசுத் தலைவர் வழங்கி உள்ளார்.

    உங்கள் குரலில் தான்

    உங்கள் குரலில் தான்

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில்தான் தொடங்குவேன், என்றும் உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

    டான் படத்தில் மிமிக்ரி இருக்கா

    டான் படத்தில் மிமிக்ரி இருக்கா

    சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து கூறிய நிலையில், அவரது ரசிகர்கள் காலேஜ் பாயாக டான் படத்தில் நடிக்கிறீங்களே மிமிக்ரி சீன் ஏதாவது இருக்குமா பாஸ் என கேட்டு வருகின்றனர். மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்து நடித்து இருப்பார். இன்று வெளியாகவுள்ள டான் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    English summary
    Actor Sivakarthikeyan wishes Solomon Pappaiah for getting Padma Shri award and he reveals about using Solomon Pappaiah’s voice for his mimicry shows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X