ஸ்னேகா, த்ரிஷாவுக்கு விருது
ஆந்திர மாநில அரசின் நந்தி விருது நடிகைகள் த்ரிஷா, ஸ்னேகாவுக்கு கிடைத்துள்ளது.
ஆந்திர மாநில அரசு சார்பில் ஆண்டுதோரும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு நந்திவிருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான நந்தி விருதுகள் தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ளன.சிறந்த நடிகருக்கான விருதை மகேஷ்பாபு பெற்றுள்ளார். அத்தடு படத்திற்காகஇவ்விருது அவருக்குக் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை த்ரிஷா தட்டிச்சென்றுள்ளார்.
பிரபு தேவா இயக்கத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக அவர் நடித்தநுவ்வொஸ்தானன்டே நேனு ஒத்தன்டனா என்ற படத்தில் நடித்தற்காக த்ரிஷாவுக்குவிருது கிடைத்துள்ளது.
ராதா கோபாலம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சினேகாவுக்கு சிறந்த நடிகைக்கானசிறப்பு விருது கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருது பானுப்பிரியாவுக்குக் கிடைத்துள்ளது.
இலியானாவின் எழுச்சியால் தளர்ச்சி அடைந்து காணப்படும் த்ரிஷாவுக்கு, நந்திவிருது பெரும் தெம்பைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Comments


Click it and Unblock the Notifications