twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காற்றில் பறப்பதாய் உணர்கிறேன்... கோல்டன் க்ளோப் விருது பெற்ற முதல் தென் கொரிய நடிகர் குஷி!

    |

    தென் கொரியா : சர்வதேச அளவில் உயர்ந்த திரைப்பட விருதுகளில் ஒன்றாக கோல்டன் க்ளோப் விருதுகள் காணப்படுகின்றன.

    இந்த விருதை ஸ்குவிட் கேம் சீரிசில் நடித்த தென் கொரிய நடிகரான 77 வயதான ஒசங் சோ தட்டி சென்றுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 17ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஸ்குவிட் கேம் தொடருக்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

    'நண்பன்’ 10 ஆம் ஆண்டு...யதார்த்த நடிப்பில் கலக்கிய விஜய்...கொண்டாடிய ரசிகர்கள் 'நண்பன்’ 10 ஆம் ஆண்டு...யதார்த்த நடிப்பில் கலக்கிய விஜய்...கொண்டாடிய ரசிகர்கள்

    கோல்டன் க்ளோப் விருதுகள்

    கோல்டன் க்ளோப் விருதுகள்

    சர்வதேச அளவில் திரைப்பட விருதுகளில் உயர்ந்த விருதாக கருதப்படுவது கோல்டன் க்ளோப் விருதுகள். இந்த விருதை பெறுவதற்கு சர்வதேச திரைப்பட நடிகர்கள் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரிய நடிகருக்கு விருது

    கொரிய நடிகருக்கு விருது

    ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் க்ளோப் விருது காணப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில் ஸ்குவிட் கேம் என்ற சீரிசில் நடித்த 77 வயது தென்கொரிய நடிகர் ஓசங் சோ சிறந்த சப்போர்ட்டிங் நடிகர் என்ற விருதை தட்டி சென்றுள்ளார்.

    ஸ்குவிட் கேம் தொடர்

    ஸ்குவிட் கேம் தொடர்

    கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகி உலக அளவில் பிரபலமான தொடராக விளங்கி வருகிறது ஸ்குவிட் கேம் தொடர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொடர்களை தாண்டி அதிகமாக உலக அளவில் விரும்பி பார்க்கப்பட்ட தொடர் என்ற பெருமையை இந்த தொடர் பெற்றுள்ளது.

    ப்ளேயர் 001 கேரக்டர்

    ப்ளேயர் 001 கேரக்டர்

    ஸ்குவிட் கேம் தொடரில் ப்ளேயர் 001 என்னும் கேரக்டரில் ஓசங் சோ நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது இவர் விருதுக்கும் தேர்வாகியுள்ளார். இதன்மூலம் கோல்டன் க்ளோப் விருதை பெற்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

    200க்கும் அதிகமான மேடை நாடகங்கள்

    200க்கும் அதிகமான மேடை நாடகங்கள்

    மேடை நாடகங்கள் மூலம் தனது நடிப்புப்பயணத்தை துவங்கிய ஓசங் சோ இதுவரை 200க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 22வது வயதில் தனது நடிப்பை துவங்கிய இவர் தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்து வருகிறார்.

    உலக அளவில் பிரபலம்

    உலக அளவில் பிரபலம்

    கடந்த 1967 முதல் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்குவிட் கேம் இவரை உலக அளவில் பிரபலமாக்கியுள்ளது. தான் காற்றில் மிதப்பது போல உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபலமாக இருப்பதும் கடினமானது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Korean actor O Yeong Su got the Golden globe award for Squid game series
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X