»   »  நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கினாலும் ஸ்ரீதேவிக்கு ஒரே ஒரு மனக்குறைதான்!

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கினாலும் ஸ்ரீதேவிக்கு ஒரே ஒரு மனக்குறைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழுக்கு நிகராக தெலுங்கு இந்தியிலும் கலக்கி உள்ளார்.

இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

பிலிம்பேர் விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.

சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். நாகின், சாந்தின், குதா கவா படங்களுக்கு சிறப்பு விருதுகள் பெற்றார்.

தெலுங்கில்

தெலுங்கில்

ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது.

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ

இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.

2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும் கவுரவித்தது.

தேசிய விருது

தேசிய விருது

மொத்தம் நூற்றுக்கும் அதிகமான விருதுகளை ஸ்ரீதேவி பெற்றுள்ளார். ஆனாலும் அவருக்கு தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை என்ற குறை இருந்தது.

English summary
Late Actress Sridevi was recieved numourous awards but she never got a National Award for acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil