ஆஸ்கர் வாங்காம விடமாட்டாரு போல ராஜமெளலி... சிறந்த சர்வதேச பட விருது உள்பட 5 விருதுகளை வென்ற RRR!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் முன்னதாக ஏகப்பட்ட சர்வதேச விருதுகள் பிரம்மாண்ட அளவில் நடைபெற்று வருகின்றன. கோல்டன் குளோப் விருது விழாவில் இரு விருதுகளை RRR திரைப்படம் பாடலுக்காக வென்ற நிலையில், ஆஸ்கர் நாமினேஷனில் நாட்டுக் கூத்து பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற Hollywood Critics Association விருது விழாவில் சிறந்த ஸ்டன்ட் மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த பாடல், ஸ்பாட்லைட் மற்றும் சிறந்த ஆக்ஷன் திரைப்படம் என 5 விருதுகளை ராஜமெளலியின் RRR படம் தட்டித் தூக்கி உள்ளது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழா முடிந்த பின்னர் தான் ராஜமெளலி தனது டீமுடன் ஹைதராபாத் திரும்ப உள்ளார்.

சிறந்த ஸ்டன்ட்டுக்கான விருது
ஆஸ்கர் விருது விழாவில் 24 பிரிவுகளுக்கு விருது வழங்கப்படும் நிலையில், சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது பிரிவே ஆஸ்கரில் இல்லை. ஆனால், ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் நடத்தும் இந்த விருது விழாவில் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான பிரிவு உள்ளது. அந்த பிரிவில் பல ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதை கைப்பற்றி உள்ளது.

சர்வதேச திரைப்பட விருது
ஸ்டண்ட்டுக்கு மட்டுமின்றி சிறந்த சர்வதேச திரைப்பட விருதையும் HCA விருது விழாவில் வென்று இந்திய ரசிகர்களை பெருமைக்கொள்ளச் செய்துள்ளது RRR திரைப்படம். இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

மொத்தம் 5 விருதுகள்
சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த பாடல் நாட்டுக் கூத்து, சிறந்த ஸ்டன்ட், ஸ்பாட் லைட் மற்றும் சிறந்த ஆக்ஷன் படம் என ஒட்டுமொத்தமாக 5 ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்று மாஸ் காட்டியுள்ளது. சர்வதேச அரங்கில் இதுவரை அதிக விருதுகளை இந்த முறை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஸ்ஸான ஆஸ்கர் நாமினேஷன்
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் பிரிவில் ஆர்ஆர்ஆர் நாமினேட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்கரில் அந்த படம் நாமினேட் ஆகவில்லை. அதற்கு பதிலாக சிறந்த பாடல் பிரிவில் மட்டும் நாட்டுக் கூத்து பாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கம் நடத்தும் இந்த விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்பட விருதையே ஆர்ஆர்ஆர் வென்று கெத்துக் காட்டி உள்ளது.

அடுத்து ஆஸ்கர் தான்
வரும் மார்ச் 13ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள ஆஸ்கர் விருது விழாவில் ஒரு பிரிவில் நாமினேட் ஆகி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் வெற்றிப் பெற்றால், இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வக்காண்டா ஃபாரெவர் பாடல் மட்டுமே ஆர்ஆர்ஆர் நாட்டுக் கூத்து பாடலுக்கு கடும் போட்டியாக உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











