ஷ்ரேயா,நந்திதா, ராய்லட்சுமி நடனமாடும் சன் குடும்பம் விருதுகள் விழா

By Mayura Akilan

சென்னை: சன் டி.வி.யின், ‘சன் குடும்பம் விருதுகள்' வழங்கும் விழா, நாளை மகாபலிபுரத்தில் மிகப் பிரமாண்டமாக நடக்கிறது.

சன் டி.வியில் தினமும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகிறது.

கடந்த முறை இந்த விருதுவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமர்க்களமாக நடைபெற்றது. சின்னத்திரை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் கலைவிழாவும் இடம்பெற்றன.

சன் குடும்பம் விருது விழா

சன் குடும்பம் விருது விழா

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, அக்டோபர் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஏராளமான சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெறுகிறார்கள்.

சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்கள்

திரைப்பட நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மேலும் சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது நடிகர், நடிகை ஒத்திகைப் பார்த்து வருகின்றனர்.

ஸ்ரேயா, பூர்ணா..

ஸ்ரேயா, பூர்ணா..

ஸ்ரேயா, பூர்ணா, ராய்லட்சுமி ஆகியோர் ஹிட் பாடல்களுக்கு நடனம் ஆடுகின்றனர்.

ஆண்ட்ரியா பாடல்

ஆண்ட்ரியா பாடல்

ஆண்ட்ரியா சில பாடல்களை பாடுகிறார். நடிகர் மனோபாலா, மயில்சாமி, நளினி, மதுமிதா, மதுரை முத்து ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சிகளும் விழாவில் நடைபெறுகிறது.

திருமுருகன் – அபிதா

திருமுருகன் – அபிதா

கடந்த விருது விழாவில் சிறந்த கதாநாயகனுக்கான விருது ‘நாதஸ்வரம்' தொடரில் நடித்த திருமுருகனுக்கும் சிறந்த கதாநாயகி விருது ‘திருமதி செல்வம்' தொடரில் நடித்த அபிதாவுக்கும் கிடைத்தது.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

டெல்லி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ராதிகா சரத்குமாருக்கு நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருதும் வழங்கப்பட்டது.

18 சீரியல்கள்

18 சீரியல்கள்

இந்த ஆண்டு சொந்த பந்தம், பொம்மலாட்டம், தேவதை, மரகத வீணை, பொன்னூஞ்சல், இளவரசி, வள்ளி, கல்யாணப்பரிசு, பிள்ளை நிலா, முந்தானை முடிச்சு, பாசமலர், நாதஸ்வரம், தெய்வ மகள், வம்சம், தென்றல், வாணி ராணி, சக்தி, அழகி ஆகிய பதினெட்டு தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

26 பிரிவுகளில் விருதுகள்

26 பிரிவுகளில் விருதுகள்

சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட 26 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது.

தென்னங்கன்று சவால்

தென்னங்கன்று சவால்

சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழாவை முன்னிட்டு தென்னங்கன்று சவாலை, சன் குடும்பம் விருது குழு உருவாக்கி உள்ளது.ஒவ்வொரு குடும்பமும் ஒரு மரத்தை கண்டிப்பாக நடவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த சவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மரம் நடவேண்டும்

மரம் நடவேண்டும்

சன் டி.வியில் ஒளிபரப்பாகும் ஏதாவது ஒரு தொடரில் நடிப்பவர்கள், மற்ற தொடரில் நடிப்பவர்களுக்கு தென்னங்கன்றைப் பரிசாக அளிப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு அதே போல, தென்னங்கன்றைப் பரிசாக அளிக்க வேண்டும். எல்லோருக்கும் மரம் நடுவதுப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தென்னங்கன்று சவாலை, ‘சன் குடும்பம் விருதுகள்' குழு ஏற்பாடு செய்துள்ளது.

தீபக் – ஐஸ்வர்யா

தீபக் – ஐஸ்வர்யா

நிகழ்ச்சிகளை சின்னத்திரை நடிகர் தீபக்கும் நடிகை ஐஸ்வர்யாவும் தொகுத்து வழங்குகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X