twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாதாசாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

    |

    டெல்லி : சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

    Recommended Video

    Superstar Rajinikanth Getting 51st DadaSaheb Phalke Award | 67th NATIONAL FILM AWARDS

    டெல்லியில் நடைபெற்றுவரும் விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதினை பெற்றார்.

    இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி ஆரவாரத்தில்…. அமுங்கிப்போன அபிஷேக் எவிக்‌ஷன்!இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி ஆரவாரத்தில்…. அமுங்கிப்போன அபிஷேக் எவிக்‌ஷன்!

    முன்னதாக இந்த விருதினை பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்த ரஜினிகாந்த், இந்த நேரத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இல்லாதது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

    தாதாசாகேப் பால்கே விருது

    தாதாசாகேப் பால்கே விருது

    திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது. முன்னதாக இந்த விருதினை பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். மேலும் இயக்குநர் கே பாலசந்தரும் இந்த விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதினை தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

    விருது வழங்கும் விழா

    விருது வழங்கும் விழா

    கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த விருது அறிவிக்கப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த இந்த விருது வழங்கும் விழா இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அளவில் திரைத்துறையினர் திரளாக பங்கேற்றனர். இந்நிலையில் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் விருதினை பெற்றுள்ளார்.

    ரஜினிகாந்த் டெல்லி பயணம்

    ரஜினிகாந்த் டெல்லி பயணம்

    இதையொட்டி நேற்றைய தினம் டெல்லி பயணத்தை மேற்கொண்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்த விருதினை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் இந்த நேரத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இரட்டிப்பு மகிழ்ச்சி

    மேலும் ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கையிலும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். இன்றைய தினம் தனக்கு 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். விருது பெறுவது மற்றும் தனது மகள் சௌந்தர்யா உருவாக்கியுள்ள ஹுட் ஆப்பை தனது குரலில் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    நடிகர்கள் பங்கேற்பு

    நடிகர்கள் பங்கேற்பு

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் இயக்குநர் ஆர் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். இதில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகராக தனுஷ், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகர், பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்திற்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

    முத்திரை பதித்த நடிகர்

    முத்திரை பதித்த நடிகர்

    மேலும் விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி இமானுக்கு வழங்கப்படுகிறது. திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்துவரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது வரை சூப்பர்ஸ்டாராக போற்றப்படுகிறார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    இந்நிலையில் இவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தெரிவித்திருந்தனர்.

    English summary
    Superstar Rajinikanth got Dadasaheb Phalke award in Delhi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X